இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இன்னும்சில போட்டிகளுக்கு சொதப்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார்.
செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்கார்ரகள் மயங்க் அகர்வால், கேஎல்ராகுல் சிறப்பாக விளையாடமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை பரிதாபம்தான்.
கடந்த பல போட்டிகளாகவே இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் படுமோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. மூவருமே சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தபோதிலும் சமீபகாலமாக பெரிய இன்னிங்ஸை யாருமே ஆடவில்லை. கடைசியாக புஜாராக அரைசதம் அடித்தது இங்கிலாந்து தொடரில்தான் நியூஸிலாந்துதொடரிலும் அடிக்கவில்லை. ரஹானே ஏதாவது ஒரு போட்டியில்தான் விளையாடுகிறார். கேப்டன் கோலி சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிறது
ஆக இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி என்பது நடுவரிசை பேட்டிங்தான். தென் ஆப்பிரிக்க அணிதிட்டமிட்டு செயல்பட்டு தொடக்க பேட்ஸ்மேன்களை தூக்கிவிட்டாலே இந்திய அணியின் நடுவரிசைஆட்டம் கண்டுவிடும். ஏனென்றால், நடுவரிசையில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை.
ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ்அய்யர், சூர்யகுமார் யாதவ், பஞ்ச்சல் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்தும் மூத்த வீர்ரகள் எனும் அடையாளத்துடன் அணியில்இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக புஜாரா எப்போதாவது விளையாடும் தனது இன்னிங்ஸை வைத்துக்கொண்டு தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகிறார். செஞ்சூரியன் டெஸ்டில் புஜாரா முதல்இன்னிங்ஸில் டக்அவுட், 2-வது இன்னிங்ஸில் 16 ரன்களில் வெளியேறினார்.
புஜாராவின் செயல்பாடு குறித்து தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் கூறுகையில் “ இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகச் செயல்படவில்லை. ராகுல் மட்டுமே முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ஆனால், ராகுலையும் ,கோலியையும் மட்டுமே முழுமையாக அணி சார்ந்திருக்க முடியாது.
புஜாராவைப் பற்றி பேச வேண்டுமானால் அவர் ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால், தொடர்ந்து சொதப்பி வருகிறார், அவருக்கான இடத்தில் ஸ்ரேயாஸ்அய்யர் காத்திருக்கிறார். மூத்த வீரரான புஜாரா தொடர்ந்து சொதப்பும்போது, வேறு என்ன செய்ய முடியும் சிறிது காலத்துக்கு ஒய்வெடுங்கள் என்று விரைவில் சொல்லவிட வேண்டியதுதான்.
இந்திய அணி குழுவாகச் சிறப்பாகச் செயல்படுகிற, எனக்கு அணி மீது முழுமையா நம்பிக்கை இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணியைப் பற்றிப் பேசினால், அவர்கள் வெற்றிக்காக விளையாடவில்லை. பலவீன பேட்டிங் வரிசை, பந்துவீச்சு குறைபாடுடன்தான் தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. அதிலும் 2-வது டெஸ்ட் போட்டியில் டீ காக் இருக்கமாட்டார் என்பதால் பேட்டிங் வரிசை இன்னும் பலவீனமாகும். பேட்டிங் வரிசை உருக்குலையும்.
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. சிராஜின் பந்துவீச்சு அற்புதமாக இருந்து வருகிறது, அணியின் மாஸ்டர் பீஸாக பும்ரா இருக்கிறார். ஆதலால், நிச்சயமாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும்
இவ்வாறு சரண்தீப் சிங் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago