தெ.ஆப்பிரி்க்க ஒருநாள் தொடர்: ரோஹித் சர்மா இல்லை; இந்திய அணிக்கு புதிய கேப்டன், துணைக் கேப்டன் : 5 ஆண்டுகளுப்பின் அஸ்வின்

By செய்திப்பிரிவு


புதுடெல்லி :தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம் பெறவில்லை, புதிய கேப்டனாக கே.எல்.ராகுலும், துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல்,ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உடற்தகுதியில்லாததால் சேர்க்கப்படவில்லை, டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி வரும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாட அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2017, ஜூன் 30ம் தேதி நார்த்சவுண்டில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் களமிறங்கினார் அதன்பின் ஓரங்கப்பட்டநிலையில் 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடர் முடிந்தபின் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. வரும் 19ம் தேதி முதல் ஒருநாள் ஆட்டமும், 21ம் தேதி 2-வது போட்டியும், 23ம் தேதி கேப்டனில் கடைசிப் போட்டியும் நடக்கிறது.

இந்தத் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணி நேற்று டெல்லியில் தேர்வு செய்யப்பட்டது. இது குறித்து ேதர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா கூறியதாவது:

ரோஹித் சர்மா உடற்தகுதியில்லை, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை, பயிற்சி வழங்கப்பட்டு வருவதால், ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. ஆதலால், கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவிவழங்கப்படுகிறது. அவரின் தலைமைப்பண்பு மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம், நிச்சயம் அவர் அதை நிரூபிப்பார் .

அணியைக் கையாள ராகுல் சிறந்தவீரர், அனைத்து விதமான ஃபார்ெமட்களிலும் ராகுல் விளையாடுகிறார் என்பதால், அவருக்கு வாய்ப்பளித்தோம். ராகுலை வளர்க்க வேண்டும், பும்ராவுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது நாங்கள் 2022 ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பையைத் தாண்டி சிந்திக்கவில்லை. அநேரம் 2023 உலகக் கோப்பைக்கையும் மனதில் வைத்திருக்கிறோம்.முதலில் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் தேவை.

ஒருநாள் தொடரில் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்துதொடரில் காயமடைந்த ரவிந்திர ஜடேஜா இன்னும் குணமாகவில்லை என்பதால், அவர் பரிசீலிக்கப்படவில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் இளம் வீரர்கள் விளையாடியதை வைத்து சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அஸ்வின், ஷிகர் தவண் அணிக்குள் வந்துள்ளனர்.

ரவி பிஷ்னோய், ரிஷி தவண், ஷாருக்கான், ஹர்சல் படேல், ஆவேஷ் கான் ஆகியோரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது, அவர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு ஷர்மா தெரிவித்தார்

இந்திய அணி வீரர்கள் விவரம்

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா(துணைக் கேப்டன்), ஷிகர் தவண், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், யஜுவேந்திர சஹல், ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்