2021-ல் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள்: ஒருநாள், டி20-ல் ஓர் இந்திய வீரர் கூட இல்லை: டெஸ்டில் மூவருக்கு இடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2021-ம் ஆண்டின் இறுதியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்த இந்த தருணத்தில், இந்த ஆண்டில் ஒருநாள், டி20 போட்டி முழுவதும் அலசி ஆராய்ந்தால், அதிக ரன் சேர்த்த பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர் ஒருவர் கூட டாப் 10 வரிசையில் இல்லை.

இந்த காலண்டர் ஆண்டில் இந்திய வெளிநாடுகளில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தாலும், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சராசரிக்கும் குறைவாகவேதான் ரன்கள் சேர்த்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி, சர்வதேச போட்டிகளில் கோட்டை விட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எதிர்ப்பார்ப்புக்கும் மாறாக இந்திய அணி விளையாடிய லீக் சுற்றோடு வெளியேறியது. உள்நாட்டில் நடந்த டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள், வெளிநாட்டில் நடந்தவை அனைத்தையும் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

2021்-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 1,708 ரன்கள் (61 சராசரி) குவித்து முதலிடத்திலும், இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா 906 ரன்களுடன் (47சராசரி) 2-வது இடத்திலும் உள்ளனர். இலங்கை வீரர் கருணாரத்னே 902 ரன்களுடன் (69) 3-வது இடத்திலும் உள்ளார்.

டாப்-8 வீரர்கள்:
1. ஜோ ரூப் 1,708 ரன்கள் (61 சராசரி)
2. ரோஹித் சர்மா 906 (47.68)
3. திமுத் கருணாரத்னே 902(69.38)
4. ரிஷப் பந்த் 748 (39.46)
5. சத்தேஸ்வர் புஜாரா 702 (28.08)
6. அபித் அலி 695 (49.64)
7. கிரேக் பிராத்வெய்ட் 675 (33.75)
8. லஹிரு திரிமானே 659 (50.69)

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள்

1. பால ஸ்ட்ரிலிங் 705 (54.23 சராசரி)
2. ஜானேமன் மலான் 509 (84)
3. தமிம் இக்பால் 464 (38)
4. ஹாரி டெக்டர் 454 (37.83)
5. ஆன்டி பால்பிரின் 421 (32.38)
6. முஸ்பிகுர் ரஹிம் 407 (58.14)
7. பாபர் ஆஸம் 405 (67.50)
8. மகமதுல்லா 399 (49)

டி20 போட்டியில் அதிக ரன்கள்

1. முகமது ரிஸ்வான் (பாக்.) - 1,326 (136 ஸ்ட்ரைக்ரேட்)
2. பாபர் ஆஸம் 939 (128)
3. மார்டின் கப்தில் 678 (145)
4. மிட்ஷெல் மார்ஷ் 627 (130)
5. ஜாஸ் பட்லர் 589 (143)
6. முகமது நயிம் 575 (100)
7. எய்டன் மார்க்ரம் 570 (149)
8. குயின்டன் டீ காக் 524 (131)

இதில் டி20 போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் எந்த இந்திய பேட்ஸ்மேனும் டாப் 8 வரிசையில் இல்லை. 2021-ம் ஆண்டில் இந்திய அணி 16 டி20 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அதில் 4 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு டிராவும், உள்நாட்டில் இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் ஒரு தோல்வியும் அடைந்தது.

உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் இந்திய அணி தோற்றது. அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளில் நாட்டிங்ஹாமில் நடந்த ஆட்டத்தில் டிரா செய்த இந்திய அணி லார்ட்ஸ், ஓவலில் வென்றது, லீட்ஸ் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த டெஸ்டில் டிரா செய்த இந்திய அணி, மும்பை டெஸ்டில் வென்றது. 12 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடி, அதில் 3 போட்டிகளில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியும், 8 போட்டிகளில் வெற்றியும் பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்