மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் 11 வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர் ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அடுத்துவரும் சிட்னி டெஸ்டில் ஹெட் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி போட்டி ரெப்ரீ டேவிட் பூனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பயோ-பபுள் சூழலில் நடந்து வந்த பிக் பாஷ் லீக்கிலும் கரோன வைரஸ் புகுந்துள்ளது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்வாகம் விடுத்த அறிக்கையில் “ எங்கள் அணியில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஊழியர்கள் 8 பேர் 7 வீரர்களுக்குகு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதியான வீரர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி தண்டர் விடுத்த அறிக்கையில் “ 4 வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லைத் தெரியவந்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் முன் மீண்டும் வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை வழங்கிய சுகாதார விதிகளைக் கடைபிடித்து பரிசோதனை நடத்தப்படும் ” எனத் தெரிவி்த்துள்ளது.
அடிலெய்டில் இன்று இரவு சிட்னி தண்டர்ஸ் அடிலைய்ட் ஸ்ட்ரைக்ஸ் அணியுடன் மோதல் நடத்த இருந்த நிலையில் வீரர்களுக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago