ஆஷஸ் தொடரில் கரோனா: ஆஸி. அணியில் முக்கிய வீரருக்கு தொற்று

By செய்திப்பிரிவு


மெல்போர்ன்: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குள்ளும் கரோனா வைரஸ் ஊடுவிவிட்டது. இங்கிலாந்து அணியின் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடமாட்டார் அவருக்குப்பதிலாக உஸ்மான் கவாஜா விளையாடுவார் எனத் தெரிகிறது. ஆனாலும் 14 நாட்கள் சிகிச்சைக்குப்பின் டிராவிஸ் ஹெட் ஹோபர்ட்டில் நடக்கும்கடைசி டெஸ்டில் விளையாடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. அடுத்து நடக்கும் 2 ஆட்டங்களும் முறைக்காகவே நடத்தப்பாட்டாலும், இங்கிலாந்து அணியை க்ளீன் ஸ்வீப் செய்ய ஆஸி. அணிகடுமையாக முயற்சிக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டிராவிஸ் ஹெட் பிரிஸ்பேனில் 152 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. அறிகுறியில்லாத கரோனா தொற்று என்பதால், 7 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

டிராவிஸ் ஹெட்டுடன் ஆஸ்திரேலிய அணியில் மற்ற வீரர்கள் நெருக்கமாக இருந்தார்களா அவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
மிட்ஷ்ெல் மார்ஷ், நிக் மேடிஸன், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் அணியில் இடம் பெற தயாராக இருந்தாலும், ஹெட்டுக்குப் பதிலாக கவாஜா இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இங்கிலாந்து அணியில் பந்துவீச்சுப்ப யிற்சியாளர் ஜான் லீவிஸ், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜீத்தன் படேல், பயிற்சியாளர் டேரன் வென்னஸ் ஆகியோர் கரோனாஅறிகுறி காரணாக தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இதுதவிர ஐசிசி மேட்ச் ரெப்ரி டேவிட் பூன் கரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE