11 ஆண்டுக்குப்பின் இந்திய அணிக்கு கிடைத்த அதிக டெஸ்ட் வெற்றி; தெ. ஆப்பிரிக்க சந்தித்த அரிதான தோல்வி: சில சுவாரஸ்யங்கள்

By செய்திப்பிரிவு


செஞ்சூரியன்: 2010ம் ஆண்டுக்குப்பின் (2016ம் ஆண்டு தவிர) இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக வெற்றிகளை இந்திய அணி 2021ம் ஆண்டில் பெற்றுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 8 வெற்றிகளைப் பெற்றது, இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிடைத்ததாகும்.

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. செஞ்சூரியனை தனது கோட்டையாக வைத்திருந்த தென் ஆப்பிரிக்காவை அந்த கோட்டையில் வைத்தே இந்திய அணி வீழ்த்தியது. இரு அணிகளிலும் சேர்த்து 40 விக்கெட்டுகளில் 38 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.

இந்த போட்டி குறித்த சில சுவாரஸ்யமான சில புள்ளிவிவரங்கள்

செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்பார்க் மைதானத்தில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 3-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு முன் 2000ம் ஆண்டில் இங்கிலாந்திடமும், 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடமும் தென் ஆப்பிரிக்க அணி தோற்றது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி பெறும் 4-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். அதிலும் செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி பெறும் முதல் வெற்றி. இதற்கு முன் ஜோகன்னஸ்ப்ரக்கில் 2006, 2018ம் ஆண்டிலும், 2010ல் டர்பனிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தென் ஆப்பிரி்க்க அணி 200 ரன்களுக்கு கீழ் 3 முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளது. 2002-ல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திேரலியாவுக்கு எதிராகவும், 2018ல் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிராகவும் ஆட்டமிழந்தது. செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை 200 ரன்களுக்கு குறைவான ஸ்கோரில் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது இல்லை.முதல்முறையாக ஆட்டமிழந்துள்ளது.

தென் ஆப்பிரி்க்க அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஆஸி.முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் கேப்டன் விராட் கோலியும் பகிர்ந்து கொண்டார். இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 8 வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

இந்திய அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மோதி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2018,2020ம் ஆண்டில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாக்ஸிங் டே வெற்றி பெற்று 2021ல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2010ம்ஆண்டில் டர்பனில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி.

செஞ்சூரியனில் இந்திய அணியின் பந்துவீச்சு சராசரி 19.10 சராசரியாகும். மிகக்குறைந்த சராசரியில் இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை 6 முறை மட்டும்தான் வெளிநாடுகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்தப் போட்டியில் 783 பந்துகள் வீசப்பட்டன.

இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறும் 8-வது வெற்றி இதுவாகும். காலண்டர் ஆண்டில் 2-வது அதிகபட்ச வெற்றி யாகும். இதற்குமுன் 2016ல் 9 வெற்றிகளை இந்திய அணி அதிகபட்சமாகப் பெற்றிருந்தது. கடைசியாக 2010ம் ஆண்டில் 8 வெற்றிகளை இந்திய அணி பெற்றது அதன்பின் இந்த ஆண்டுதான் 8 வெற்றிகளைப்பெறுகிறது. இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிைடத்த வெற்றியாகும்.

ஒரு காலண்டர் ஆண்டில் எதிரணியை இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருட்டியது இது 12வது முறையாகும். கடந்த 1978-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்குள் எதிரணியை 13 முறை சுருட்டியிருந்து. அதற்கு அடுத்தார்போல் இந்திய அணி இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்