உலக பாட்மிண்டனில் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரூ.7 லட்சம் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன் வழங்கினார்

By என். மகேஷ்குமார்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தை பாராட்டி ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஸ்பெயினில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்தகிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கிடாம்பி ஸ்ரீகாந்த், பதக்கம் வென்றால் அவருக்கு அரசு பணியும், ரூ.7 லட்சம் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

இந்நிலையில், அமராவதியில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை ஸ்ரீகாந்த் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்ரீகாந்த்துக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையையும், திருப்பதியில் பாட்மிண்டன் அகாடமி தொடங்க 5 ஏக்கர் நிலப்பாட்டவும் வழங்கி பாராட்டு தெரிவித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. உலக சாம்பியன்ஷிப்பில் ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் பெற்றதும் அவரை இணை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து, முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு பிறப் பித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்