இந்திய கிரிக்கெட்டை ஆட்டி வைத்த கோலி , சாஸ்திரி; அடக்க வந்த தோனி: முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு


மும்பை:இந்தியக் கிரிக்கெட்டையே விராட் கோலியும், ரவி சாஸ்திரியும்தான் ஆட்டி வைத்தனர். அணியில் இவர்கள் தலையீட்டை குறைத்து சமநிலையை ஏற்படுத்தத்தான் டி20 உலகக் கோப்பைக்கு மென்ட்டராக தோனி நியமிக்கப்பட்டார் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அடுல் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் கிரிக்ெகட்டுக்குள் தோனி மென்ட்டராக வந்தவுடன் ரசிகர்களுக்கு ஏராளமான சந்தோஷம். டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணி ஏதாவது சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பாரத்்தார்கள். ஆனால், அந்த மகிழச்்சி லீக் ஆட்டங்களோடு முடிவுக்கு வந்தது.

அதுமட்டுமல்ல டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறியவுடனே கோலியின் டி20 கேப்டன்ஷியும், ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் ஒப்பந்தமும் முடிந்தது.

டி20 உலகக் கோப்பைக்கு ஏன் தோனி இந்திய அணிக்கு மென்ட்டராக நியமிக்கப்பட்டார் என்று எழுந்த கேள்விக்கும் பிசிசிஐ தலைவர், செயலாளர் ஜெய் ஷாவும் பதில் அளித்தனர். விராட் கோலி கேப்டன்ஷியில் ஐசிசி தொடர் எதையும் இந்திய அணி ெவல்லவில்லை என்பதால், அனுபவம் வாய்ந்த தோனியின் அறிவுரைகள் நிச்சயம் பலன்அளிக்கும்என்பதால் மென்ட்டராக நியமிக்கப்பட்டார் எனத் தெரிவித்தார்கள்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அடுல் வாசன், “ அணியில் ரவிசாஸ்திரி, கோலி இருவரும் தாங்கள் நினைத்தமாதிரி அணியை வழிநடத்தாமல் இருக்க கடிவாளம் போடவே தோனி கொண்டுவரப்பட்டார்” என புதுக்கதையை தெரிவித்துள்ளார்.

தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அடுல் வாசன் பேசுகையில் “ இந்திய கிரிக்கெட்டை விராட் கோலியும், ரவி சாஸ்திரியும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது. இந்திய அணியில் யார் விளையாட வேண்டும், யார் ப்ளேயிங் ெலவனில் இருக்கலாம், இருக்கக்கூடாது, வீரர்களைத் தேர்வு செய்வது போன்றவற்றையே இருவரும்தான் முடிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் எதையும் செய்யலாம் என்ற நிலைதான் இருந்தது. யாரை அணிக்குள் கொண்டுவர இவர்கள் இருவரும்நினைக்கிறார்களோ அவர்கள்தான் விளையாட முடியும் என்ற நிலைதான் இருந்தது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அந்த நிலை தொடரக்கூடாது. அவர்கள் இருவரின் விருப்பப்படி அணி செல்லக்கூடாது என பிசிசிஐ விரும்பியது.

இந்தியக் கிரிக்கெட்டையே கோலி, ரவி சாஸ்திரிதான் கட்டுப்படுத்துவது போல் செயல்பட்டார்கள். நல்ல மதிப்பு மிக்க ஒருவர்,அணிக்குள் வந்து இதைக்கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவும், கோலி, ரவிசாஸ்திரிக்கு கடிவாளம் போடவும்தான் தோனி மென்ட்டராக நியமிக்கப்பட்டார். ஆனால், உலகக் கோப்பையின்போது கோலியும், சாஸ்திரயும் குழம்பிப்போனார்கள்.

என்னைப்பொறுத்தவரை ரோஹித் சர்மாவை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமித்ததில் தேர்வாளர்கள் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், ஒருவீரர் அதிகமான கிரிக்கெட் விளையாடிவிட்டால், அவர் கடவுளாக பார்க்கப்படுவார். அப்போது அந்த வீரர் தனக்கு சிறப்புரிமை, சிறப்பு சலுகை வேண்டும் எனஎதிர் பார்க்கிறார். இந்த முறைதான் முதலில் மாற வேண்டும்.

நீங்கள் பிசிசிஐ அமைப்புடன் நெருக்கமாக இல்லாவிட்டாலும், நீங்கள் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். வீரர்கள் தங்களை தாழ்வாக நினைப்பதை நிறுத்த வேண்டும். பிசிசிஐ அமைப்பிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது.

இ்வ்வாறு வாசன் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்