வரலாற்று வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் உச்சம் தொட்ட முதல் இந்தியர்!

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியின் இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சரித்திரத்தைப் படைத்த ஸ்ரீகாந்த் கிடாம்பி போராடி தங்கப் பதக்கத்தைப் போராடி பறிகொடுத்தார்.

இருப்பினும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் அவர் தேசம் திரும்ப இருக்கிறார்.

45 நிமிடங்கள் நடந்த இறுதிப் போட்டி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நுழைந்த ஸ்ரீகாந்த், களத்தில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவை எதிர்கொண்டார். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் போட்டி நீடித்தது. ஆரம்பம் முதலே லோ கியான் வூ ஆதிக்கம் செலுத்த முதல் செட் கிடாம்பிக்கு மிகவும் சவாலானதாக அமைந்தது. இரண்டாவது சுற்றில் சற்றே தாக்குப்பிடித்த கிடாம்பி போராடித் தோற்றார்.

இறுதியில் 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் போராடித் தோற்றார் ஸ்ரீகாந்த் கிடாம்பி.

சக வீரரை வீழ்த்திய வேகம்: முன்னதாக, ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷ்யா சென்னுடன் மோதினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள கிடாம்பி சக வீரரான லக்‌ஷ்யா சென்னை 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 1 மணி நேரம் 9 நிமிடங்களில் அவர் வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர பெருமையைப் பெற்றார் ஸ்ரீகாந்த். இப்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்று சரித்தரித்தில் இன்னொரு மைல்கல்லையும் அவர் தொட்டுவிட்டார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE