வங்கதேசத்துக்கு எதிராக ரன் விகிதத்தை உயர்த்த தோனி வலியுறுத்தல்

By ஏஎஃப்பி

வங்கதேசத்துக்கு எதிராக நாளை (புதன்) பெங்களூருவில் இந்திய அணி விளையாடும் போது அணியின் பிக் ஹிட்டர்கள் ரன் விகிதத்தை பெரிய அளவில் உயர்த்துவது அவசியம் என்று கேப்டன் தோனி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தோல்வி ஒரு வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ரன் விகிதத்தை பெரிய அளவில் உயர்த்த வேண்டிய தேவையுள்ளதாக தோனி கருதுகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “வரவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் இன்னும் கூடுதல் முன்னேற்றம் தேவை என்றே நான் கருதுகிறேன். ரன் விகிதத்துடன் வெற்றி பெறுவதுதான் அடுத்த இரண்டு போட்டிகளில் எங்களது இலக்கு.

முதல் போட்டியில் எங்கள் ரன் விகிதம் சரிந்தது. எனவே வெறும் வெற்றி மட்டுமே போதாது ஒரு நேரத்தில் நிகர ரன் விகிதத்தின் மேலும் கவனம் வைத்து ஆடுவது அவசியம்” என்றார்.

மாறாக வங்கதேச அணி 2 தோல்விகளுடன் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில்தான் உள்ளது. ஆனாலும் கேப்டன் மஷ்ரபே மோர்டசா கூறும்போது, “நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கும் இன்னும் 2 போட்டிகள் உள்ளன, அதில் கடினமாக போராடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்