கராச்சி: பாகிஸ்தானுக்குப் பயணம் சென்றுள்ள மே.இ.தீவுகள் அணியில் ஏற்கெனவே 2 வீரர்களுக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் சென்றடைந்தது. வீரர்களுக்கு பயோ-பபுள் உருவாக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல், ஆல்ரவுண்டர்கள் ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியர் என 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் என பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில் மே.இ.தீவுகள் அணியில் மேலும் 3 வீரர்கள், 2 ஊழியர்கள் என 5 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மே.இ.தீவுகள் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அகேல் ஹூசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோருக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.
இவர்கள் தவிர்த்து துணைப் பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக், உடற்பயிற்சி நிபுணர் மருத்துவர் ஆகாஷ் மான்சிங் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.
» தென் ஆப்பிரிக்கா புறப்பட்டது கோலி தலைமையில் இந்திய அணி
» ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கினர்: மனம் திறக்கும் விராட் கோலி
மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “அடுத்துவரும் போட்டிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 வீரர்களும் விளையாட மாட்டார்கள். இதுவரை 5 வீரர்கள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார்கள். 10 நாட்களுக்குப் பின் மீண்டும் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதுவரை மே.இ.தீவுகள் அணியில் 5 முக்கிய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகும். இவர்கள் 5 பேர் தவிர டேவன் தாமஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டி20, ஒருநாள் தொடரை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், மே.இ.தீவுகள் வாரியமும் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளன.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago