ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கினர்: மனம் திறக்கும் விராட் கோலி

By செய்திப்பிரிவு


புதுடெல்லி : இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கிவிட்டார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கு முன்புதான் தெரியும் என்று இந்திய டெஸ்ட் அணியின்கேப்டன் விராட் கோலி குற்றம்சாட்டியுள்ளார்.

தென் ஆப்பிரி்க்காவுக்கு வரும் 17ம் ேததி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது அவரின் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விமர்சர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதற்கிடையே மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப்பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவிட்டார் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

கேப்டன்ஷிப்பை பறித்த விவகாரத்தில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே லேசான உரசல், மோதல் இருப்பதாக பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன. ஆனால், கோலி தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் காயம் காரணாக ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரி்ல், மகளின் பிறந்தநாளைக் காரணம்காட்டி கோலி, விலக்கு கேட்பதும் பல்ேவறு சந்தேகங்களை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களிடையே எழுப்பியது

இந்நிலையில் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒருநாள் கேப்டன் பதவி பறிப்புப் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு விராட் கோலி பதில் அளிக்கையில் “ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணித் தேர்வு நடக்கும் போதுதான் என்னை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது எனக்குத் தெரியும். எனக்கு முன்கூட்டியே கேப்டன் பதவி நீக்கம் குறித்து பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை, முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கவில்லை.

தேர்வுக்குழுக் கூட்டம் நடந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு ஒன்றரை மணிநேரத்துக்கு முன் என்னை தேர்வுக்குழுத் தலைவர் தொலைப்பேசியில் தொடர்்பு கொண்டு பேசினார். அப்போது டெஸ்ட் அணிவிவரங்களை தெரிவித்தார். பேசி முடிக்கும்போது, நாங்கள் தேர்வுக்குழுவில் உள்ள 5 பேரும், உங்களை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதான் நடந்தது. எனக்கு முன்கூட்டியே தகவல் ஏதும் இல்லை.” எனத் தெரிவித்தார்

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தபின் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், கோலி பிடிவாதமாக இருந்ததால்தான் அவரின் முடிவுக்கு பிசிசிஐ சம்மதித்தது எனவும் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் “ டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, நல்லமுறையில் ஏற்றுக்கொண்டனர், வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை, இதை தயக்கமும் காட்டவில்லை.

ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகத் தொடர விரும்புகிறேன் என பிசிசிஐயிடம் தெரிவித்தேன். என்னுடைய தரப்பிலிருந்து தகவலை தெளிவாகத் தெரிவித்தேன். ஆனால் பிசிசிஐ நிர்வாகிகளும், தலைவர்களும் நான் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக நீடிக்கவிரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும் தெரிவித்திருந்தேன்” எனத் தெரிவித்தார்.

இதனால் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது குறித்து கேள்வி எழுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்