ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணி மீண்டும் முதலிடம்

By ஏஎன்ஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. மும்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் உள்நாட்டில் தொடர்ந்து 14-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த காலண்டர் ஆண்டில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

இந்திய அணி கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின் நியூஸிலாந்து அணி அந்த இடத்தைக் கைப்பற்றியது. உள்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் மூலம் நியூஸிலாந்திடம் இருந்து மீண்டும் முதலிடத்தை இந்திய அணி பறித்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றன.

இங்கிலாந்து அணி 107 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்தில் 92 புள்ளிகளுடனும், தென் ஆப்பிரிக்கா 88 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இலங்கை அணி 83 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், 8-வது இடத்தில் மே.இ.தீவுகள் அணி 75 புள்ளிகளுடனும் உள்ளன. வங்கதேசம் 9-வது இடத்திலும், 49 புள்ளிகளுடனும் 10-வது இடத்தில் ஜிம்பாப்வேயும் உள்ளன.

வரும் புதன்கிழமை ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ளது. இந்தத் தொடர் தொடங்கியபின் டெஸ்ட் தரவிசையில் அதிகமான மாற்றங்களைக் காண முடியும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்திய அணி 42 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், வெற்றி சதவீததத்தில் 58.33 புள்ளிகளுடனும் இருக்கிறது. இலங்கை அணி 2 வெற்றிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 66.66 வெற்றி சதவீதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்