இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதமை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் லாதமை 8-வது முறையாக அஸ்வின் பெவிலியன் அனுப்பியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மொத்தம் 42 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதாவது, 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் 8 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 2002-ம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் ஷேன் வார்ன் 32 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் அஸ்வின் பந்துவீச்சு அமைந்தது.
» வெற்றியை நோக்கி இந்திய அணி: நியூஸி. போராட்டம்: 41 ஆண்டுகள் சாதனையை முறியடித்த அஜாஸ் படேல்
» இதற்குமுன் இப்படி மோசமாக ஆடி பார்க்கவில்லை: இந்திய அணி குறித்து கங்குலி மனம் திறப்பு
அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்து வீரர் ஹென்றி நிகோலஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியதன் மூலம் உள்நாட்டில் அஸ்வின் 300-வது விக்கெட்டை வீழ்த்திய பெருமையைப் பெற்றார்.
நியூஸிலாந்து தொடக்க வீரர் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, இந்த காலண்டர் ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹர்பஜன் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். இதுவரை ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே இருவரும் 3 முறை காலண்டர் ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் 4 முறை வீழ்த்தியுள்ளார்.
அஸ்வின் கடந்த 2015-ம் ஆண்டில் 62 விக்கெட்டுகளையும், 2016-ம் ஆண்டில் 72 விக்கெட்டுகளையும், 2017-ம் ஆண்டில் 56 விக்கெட்டுகளையும், 2021-ம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஹர்பஜன் சிங் 2001, 2002, 2008 ஆண்டுகளிலும், கும்ப்ளே, 1999, 2004, 2006-ம் ஆண்டுகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். கபில் தேவ் 1979, 1983-ம் ஆண்டுகளில் மட்டும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் ஹர்பஜனைப் பின்னுக்குத் தள்ளி அஸ்வின் 426 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள்தான் தேவை. தென் ஆப்பிரிக்கத் தொடரில் அஸ்வின் நிச்சயம் கபில் தேவ் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago