வேர்ல்ட் டூர் ஃபைனல்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்

By செய்திப்பிரிவு


இந்தோனேசியாவின் பாலியில் நடந்த உலக பாட்மிண்டன் வேர்ல்ட் டூப் ஃபைனலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கொரிய வீராங்கனை ஆன் செயாங்கிடம் தோல்வியடைந்து தங்கத்தை தவறவிட்டார் சிந்து.

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான வேர்ல்ட் டூப் ஃபைனல் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் கொரிய வீராங்கனை ஆன் செயங்கை எதிர்த்து களம் கண்டார் இந்திய வீாரங்கனை சிந்து.
40 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கொரிய வீராங்கனை செயங்கிடம் 16-21, 12-21 ஆகிய செட்களில் தோல்வி அடைந்தி சிந்து. இறுதி ஆட்டம் ஒருதரப்பான ஆட்டமாக முடிந்தது. சிந்து தொடர்ந்து அடையும் 3-வது தோல்வி இதுவாகும்.

வேர்ட் டூர் ஃபைனலில் மகளிர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்ற தென் கொரிய வீாரங்கனை என்ற பெருமையை செயங் பெற்றார். செயங்கிற்கு இந்தோனேசியாப் பயணத்தில் வெல்லும் பட்டம் இதுவாகும். இதற்கு முன் கடந்த சிலவாரங்களுக்கு முன் இந்தோனேசிய மாஸ்டர்ஸ், இந்தோனேசிய ஓபன் ஆகியவற்றில் செயங் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

வேர்ல்டு டூப் ஃபைனலில் போட்டியில் ஃபைனலுக்கு சிந்து 3-வது முறையாகத் தகுதி பெற்றார். அதில் 2018ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றார். மற்ற இருமுறையும் தோல்வி அடைந்தார்.

சிந்து தொடக்கத்திலிருந்தே தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடாததே தோல்விக்கான காரணாகும். சிந்து தனது அதிரடியான தாக்குதல் ஆட்டத்தை தொடக்கத்திலேயே செயல்படுத்தியிருந்தால் 19வயதான கொரியவீராங்கனையை எளிதாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், முதல் செட்டில் கடும்போட்டியளித்து 16 புள்ளிகள் வரை வந்து சிந்து வெற்றியைக் கோட்டைவிட்டார். இருப்பினும் சிந்து தொடக்கத்திலிருந்து முன்னிலை பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார், ஆனால் அதன்பின் தனது ஆட்டத்தை கோட்டைவிட்டார்.

2-வது செட்டிலும் சிந்து கடும் போட்டியளித்து 5-4 என்ற கணக்கில் இருந்தார். ஆனால் கொரிய வீராங்கனையின் ஆட்டத்தின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் சிந்து பின்தங்கினார், இதைப் பயன்படுத்தி புள்ளிகளைப் பெற்ற கொரியவீராங்கனை 10-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன்பின் கடைசிவரை விடாமல் சென்று 15-8 என்ற புள்ளிக்கணக்கில் கொரிய வீராங்கனை செயாங் முன்நிலை பெற்றார்.

அடுத்ததாக வரும் 12ம் தேதி ஸ்பெயினில் ஹியல்வா நகரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து பங்கேற்கஉள்ளார். தற்போது நடப்பு சாம்பியனான சிந்து பட்டத்தை தக்கவைப்பாரா அல்லது இழப்பாரா என்பது ெதரிந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்