நாக்பூரில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்களது மதிப்பை நிரூபித்தது.
இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஆட்டத்தின் 6-வது ஓவரில் அதிரடி வீரர் பிளெட்சரும் பின் தொடை தசை நார் காயத்தினால் இன்னிங்சை தொடர முடியாமல் 11 ரன்களில் ரிட்டையர்டு ஆனார்.
ஆப்கான் வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் இன்ஸமாம் உல் ஹக் பெரிய புன்னகையுடன் மகிழ்ச்சியை வெளியிட்டார். ஆப்கன் வீரர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கிறிஸ் கெய்லும் இணைந்தார்.
டாஸ் வென்ற டேரன் சமி முதலில் ஆப்கன் அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 56/5 என்ற நிலையிலிருந்து நஜிபுல்லா ஸத்ரானின் அற்புதமான இன்னிங்ஸினால் 123 ரன்களை எட்டியது. நஜிபுல்லா ஸத்ரான் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 48 ரன்களை எடுத்தது வெற்றி இன்னிங்ஸாக அமையப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அதிரடி தொடக்க வீரர் மொகமது ஷசாத் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பத்ரீ பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 117/8 என்று முடிந்து போனது.
கடைசி ஓவர் உண்மையில் ஆப்கன் அணியின் உறுதியை அறிவிக்குமாறு அமைந்தது. கிரீசில் பிக் ஹிட்டர் பிராத்வெய்ட் நிற்கிறார். கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 10 ரன்கள். பந்து வீச வந்தது ஆப்கன் ஆஃப் ஸ்பின்னர் மொகமது நபி. முதல் பந்தை பிராத்வெய்ட் சுற்றினார் அருமையான பிளாட் பந்து ரன் இல்லை. அடுத்த பந்து மேலேறி வந்து சுற்றினார், ஆனால் மொகமது நபி இந்தப் பந்தையும் அவருக்கு அதிக இடம் கொடுக்காத வகையில் வீசினார் மாட்டவில்லை.
இந்த இரண்டு பந்துக்கும் முரணாக 3-வது பந்து புல்டாஸாக அமைந்தது. பிராத்வெய்ட் நல்ல பந்துகளையே சிக்ஸ் அடிப்பவர், அன்று ரபாதாவின் நல்ல பந்தைத்தான் தூக்கி சிக்ஸ் அடித்து வென்றார். ஆனால் இந்த புல்டாஸ் அவருக்கு சரியாகச் சிக்கவில்லை, மிட்விக்கெட்டில் பந்து காற்றில் செல்ல, எங்கிருந்தோ ஓடி வந்த நஜிபுல்லா ஸத்ரான் சரியான நிலையில் இல்லாவிட்டாலும் அவரிடம் இருந்த உறுதியினால் பந்து தரையைத் தொடுவதற்கு முன்பாக கேட்சைப் பிடித்தார். நெருக்கடியான தருணத்தில் மிக அருமையான கேட்ச் என்றே கூற வேண்டும். பிராத்வெய்ட் ஆட்டமிழந்த பிறகு அடுத்த 3 பந்துகளில் 3 ரன்களே வந்தது மே.இ.தீவுகள் 117/8 என்று 6 ரன்கள் குறைவாக முடிந்து தோற்றுப் போனது.
முன்னதாக தொடக்க வீரர் சார்லஸ், 15 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 22 ரன்கள் விளாசி ஹமித் ஹசனின் வேகமான பந்தில் பவுல்டு ஆனார். முதல் விக்கெட்டாக 7 பந்துகள் விளையாடி ரன் எடுக்க முடியாமல் லூயிஸ் அமிர் ஹம்சாவிடம் வீழ்ந்தார்.. பிளெட்சர் 11 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிட்டையர்டு ஆனார். முக்கியமான விக்கெட்டை ஆப்கன் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் வீழ்த்தினார். மர்லன் சாமுவேல்ஸ் 5 ரன்களில் இவரிடம் பவுல்டு ஆனார். 38/3 என்ற நிலையில், டிவைன் பிராவோ (28), ராம்தின் (18) இணைந்து 41 ரன்களை சுமார் 8 ஓவர்களில் சேர்த்தனர். பிரவோவை அப்போது மொகமது நபி எல்.பி. செய்தார். 2 ஓவர்கள் சென்ற பிறகு ராம்தின்னை லெக் ஸ்பின்னர் ரஷித் கான் வீழ்த்தினார்.
அதிரடி வீரர் ஆந்த்ரே ரசல் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். டேரன் சமி இறங்கும் போது நெருக்கடி கூடியது அவர் 6 ரன்களில் குல்பதின் நயீப் பந்தில் கேட்ச் கொடுத்து 19-வது ஓவரில் வெளியேறினார். பிராத்வெய்ட் 2 சிக்சர்களை அடித்து அபாயகரமாகத் திகழ்ந்து கடைசி ஓவரில் ஸ்ட்ரைக் எடுத்துக் கொண்டார், ஆனால் 10 ரன்களை மொகமது நபி எடுக்கவிடாமல் செய்தார், பிராத்வெய்ட்டை வீழ்த்தினார். ஆப்கன் கொண்டாட்டம் தொடங்கியது.
ஆப்கன் அணியில் மொகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக, 48 ரன்களையும் கடைசியில் பிராத்வெய்ட்டிற்கு பிரமாதமான கேட்சையும் பிடித்த நஜிபுல்லா ஸத்ரான் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago