2022ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் டி20 சீசனுக்கு 8 அணிகளும் சேர்ந்து 27 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. இதற்காக ரூ.269 கோடி செலவிட்டுள்ளன. நட்சத்திர வீரர்கள் பலரை அணிகள் கழற்றிவிட்டு ஏலத்தில் எடுக்க உள்ளன.
அதில் எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், ஆன்ட்ரே ரஸல், க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். ஆனால், பண்டியாசகோதரர்கள், கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரவிச்சந்திர அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஷுப்மான் கில், யஜுவேந்திர சஹல், தீபக் சஹர் போன்ற நட்சத்திர வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
புதிதாக வரும் அகமதாபாத், லக்னோ அணிகள் 2இந்திய வீரர்கள், ஒரு உள்நாட்டு வீரருக்கு அதிகமாக தக்கவைக்க முடியாது. இந்த இரு அணிகளும் இந்த மாதம் 30ம் தேதிக்குள் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் கழற்றிவிட்ட வீரர்களைக்கூட தேர்வு செய்து தக்கவைக்க முடியும்.
ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் அதிகபட்சமாக 3 உள்நாட்டு வீரர்கள், அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இந்த 4 வீரர்களுக்காக ரூ.42 கோடி செலவிடலாம். முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3-வது வீரருக்கு ரூ.8 கோடி, 4-வது வீரருக்கு ரூ.6 கோடி என ரூ.42 கோடி செலவிடலாம். 4 வீரர்களுக்கு குறைவாகவும் தக்கவைக்கலாம்.
அணி தக்கவைப்பு விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களைத் தக்கவைக்க ரூ.42 கோடி செலவிட்டுள்ளது. அந்த அணியிடம் மீதம் ரூ.48 கோடி கையிருப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணி, கேப்டன் எம்எஸ்தோனி(ரூ.12கோடி), ரவிந்திர ஜடேஜா(ரூ.16கோடி), மொயின் அலி(ரூ.8கோடி), ருதுராஜ் கெய்க்வாட்(ரூ.8கோடி) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. டூப்பிளசி்ஸ், துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா, தீபக் சஹர் , பிராவோ கழற்றிவிடப்பட்டனர்.
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லி கேபிடல்ஸ் அணி 4 வீரர்களைத் தக்கவைத்துள்ளது, இவர்களுக்காக ரூ.39 கோடி செலவிட்டுள்ளது, மீதம் ரூ.47.50 கோடி கையிருப்பு இருக்கிறது. கேப்டன் ரிஷப் பந்த்(ரூ.16கோடி), பிரித்வி ஷா(ரூ.7.5கோடி), அக்ஸர் படேல்(ரூ.9கோடி), ஆன்ரிச் நோக்கியாவை(ரூ.6.5 கோடி) தக்கவைத்துள்ளது.
அதேசமயம் ஸ்ரேயாஸ் அய்யர், ரவிச்சந்திர அஸ்வின், ரபாடா, ஆவேஷ் கான், ஸ்டாய்னிஷ், ஸ்மித் , ஷிகர் தவண் போன்ற வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். டெல்லி அணியின் பயிற்சியாளர் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் மூத்த வீரர்ளுக்கு கல்தா கொடுத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 உள்நாட்டு, 2 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்துள்ளது, இதற்காக ரூ.42 கோடி செலவிட்டுள்ளது, கையிருப்பாக ரூ.48 கோடி இருக்கிறது. கேகேஆர் அணி சுனில் நரேன்(ரூ.6கோடி), ஆன்ட்ரோ ரஸல்(ரூ.12கோடி), வருண் சக்ரவர்த்தி(ரூ.8கோடி), வெங்கடேஷ் அய்யர்(ரூ.8கோடி) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது.
ஆனால், ஷுப்மான் கில், கம்மின்ஸ், மோர்கன், தினேஷ் கார்த்திக்,லாக்கி பெர்குஷன் போன்ற பெரிய வீரர்களை கழற்றிவிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் ஒரு வெளிநாட்டு வீரர், 3 உள்நாட்டு வீரர்களைத் தக்கவைத்துள்ளது. இதற்காக ரூ.42 கோடி செலவிட்டுள்ளது,கையிருப்பாக ரூ.48 கோடி இருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா(ரூ.16கோடி) ஜஸ்பிரித் பும்ரா(ரூ.12கோடி), கெய்ரன் பொலார்ட்(ரூ.6கோடி), சூர்யகுமார் யாதவ்(ரூ.8கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.
ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, இஷான் கிஷன்,டிரன்ட் போல்ட், ராகுல் சஹர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி 2 உள்நாட்டு வீர்ரகளை மட்டுமே தக்கவைத்துள்ளது. இதற்காக ரூ.16 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது கையிருப்பாக அதிகபட்சமாக ரூ.72 கோடி வைத்துள்ளது. ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுக்கவும், அணியை வலுவாகத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்(ரூ.4கோடி) மயங்க் அகர்வால்(ரூ.12கோடி) இருவர் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர்.
கேஎல் ராகுல், ரவி பிஸ்னோய், நிகோலஸ் பூரன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. இதில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்(ரூ.10கோடி), கேப்டன் சஞ்சு சாம்ஸன்(ரூ.14கோடி), யாஹஸ்வி ஜெய்ஸ்வால்(ரூ.4கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். இவர்களுக்காக ரூ.28 கோடி செலவிட்டுள்ளது, கையிருப்பாக ரூ.62 கோடி வைத்துள்ளது.
கடந்தமுறை ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர். இளம் வீரர்கள் ரியான் பராக், திவேட்டியா ஆகியோரும் கழற்றிவிடப்பட்டனர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன்(ரூ.14கோடி), ஜம்மு காஷ்மீர் வீரர்கள் உம்ரான் மாலிக்(ரூ.4கோடி), அப்துல் சமது(ரூ.4கோடி) இருவரும் தக்கவைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேருக்காக ரூ.22 கோடி செலவிட்டுள்ளது.கையிருப்பாக ரூ.68 கோடி உள்ளது.
நட்சத்திர வீர்கள் டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, ரிஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
ஆர்சிபி அணி
ஆர்சிபி அணி 3 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. கேப்டன் பதவியைத் துறந்த விராட் கோலி(ரூ.15கோடி), கிளென் மேக்ஸ்வெல்(ரூ.11கோடி), முகமது சிராஜ்(ரூ.7கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். இவர்களுக்காக ரூ.33 கோடி செலவிட்டுள்ளது. அந்த அணியின் கையிருப்பாக ரூ.57 கோடி இருக்கிறது. தேவ்தத் படிக்கல், யஜுவேந்திர சஹல், ஹர்சல் படேல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago