மெக்ஸிகோவை வெளியேற்றிய கடைசி நேர ஃபவுல்; காலிறுதிக்கு முன்னேறிய நெதர்லாந்து

By ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நேற்று நெதர்லாந்து வீரர் ஸ்னெய்டரின் கடைசி நேர கோல் மற்றும் மெக்ஸிகோ செய்த கடைசி நேர ஃபவுலால் விளைந்த பெனால்டி கிக் ஆகியவற்றால் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

ஃபோர்டசீலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நேற்று வெயில் கொளுத்தியது. இடைவேளைக்கு முன்பாகவும் பின்பாகவும் இரு முறை குளிர்பான இடைவேளையும் விடப்பட்டது. இந்தக் கொடும் வெயில், நடுவில் ஆட்டத்தை சற்றே மந்தப்படுத்தியது. இடைவேளை வரை கோல் இல்லை.

இடைவேளை முடிந்து 3-வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் கியோவானி டாஸ் சான்டோஸ் அபாரமான கோல் ஒன்றை அடித்து நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்தார்.

எகிறும் வெயிலில் நெதர்லாந்து சமன் செய்து விடுமா என்ற சந்தேகமே இருந்து வந்தது. மெக்ஸிகோவின் அசாத்திய கோல் கீப்பர் ஓச்சா நேற்றும் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி நெதர்லாந்தின் நம்பிக்கையை குலைத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருக்கும்போது எங்கிருந்தோ ஸ்னெய்டர் அந்த அற்புத கோலை உற்பத்தி செய்தார். ஆட்டம் சமன் ஆனது. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் செல்லும் என்றே அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தபோது, 90 நிமிடங்கள் முடிந்து காயத்திற்காக நிறுத்தப்பட்ட நிமிடங்களை ஈடுகட்டும் சில நிமிடங்கள் இருந்தது.

பெனால்டி சர்ச்சை

அப்போது, மெக்ஸிகோ வீரர் ரஃபேல் மார்க்வேஸ் தேவையில்லாமல் நெதர்லாந்து ஸ்ட்ரைக்கர் அர்ஜென் ராபினை ஃபவுல் செய்தார். ஆனால் அதற்கு பெனால்டி கிக் கொடுக்கப்படவேண்டுமா என்பது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் பெனால்டி கிக் கொடுத்தார் நடுவர். அந்த வாய்ப்பை நெதர்லாந்தின் கிளாஸ் ஜேன் ஹன்ட்டிலார் கோலாக மாற்ற நெதர்லாந்து வென்றது. இது நடுவரின் சதி என்று தோல்விக்குப் பிறகு மெக்ஸிகோ பயிற்சியாளர் கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.

மெக்ஸிகோ தவறவிட்ட கோல் வாய்ப்பு:

ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்ஸிகோ ஸ்ட்ரைக்கர் ஹெக்டர் ஹெரெரா ஆரிபி பெரல்டா அளித்த அருமையான பாஸை ஹெரெரா 2, 3 டிஃபென்டர்களைக் கடந்து எடுத்துச் சென்று வலது காலால் உதைத்தார். ஆனால் நிறைய நேரம் இருந்தது. இன்னும் கூட பொறுமையுடன் துல்லியமாக அடித்திருக்கலாம், ஆனால் ஹெரெராவின் ஷாட் சில அங்குலம் கோல் இலக்கை விட்டு விலகி வெளியே சென்றது. எளிதான வாய்ப்பு கோட்டைவிடப்பட்டது.

பிறகு கிட்டத்தட்ட முக்கால் மைதானத்திலிருந்து மெக்ஸிகோவின் கார்லோஸ் ஆல்சிடோ பயங்கரமான ஷாட் ஒன்றை நெதர்லாந்து கோல் நோக்கி அடித்தார். ராக்கெட் ஷாட் அது. மேலும் அவ்வளவு தூரத்திலிருந்து கோல் நோக்கி அடிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் கிளீசன் எதிர்பார்த்தார். தடுத்தார்.

நெதர்லாந்து கோட்டை விட்ட வாய்ப்பு:

கொதிக்கும் வெயிலில் நெதர்லாந்துக்கு 26வது நிமிடம் வரை கோல் நோக்கி செல்லும் வாய்ப்பு வரவில்லை. கடைசியாக 26வது நிமிடத்தில் ஸ்டெஃபான் டி வ்ரிஜ் ஒரு பந்தை கடத்தி வந்து வான் பெர்சீயிற்கு பாஸ் செய்ய கோலுக்கு நேராகவிர்ந்த பெர்சி வாய்ப்பக் கோட்டை விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு மெக்ஸிகோவின் முதல் கோல்:

மெக்ஸிகோ வீரர்கள் புது வித ஆக்ரோஷத்துடன் களமிறங்கினர். அகியுலார் ஒரு லாங் பாஸ் செய்தார். அது விலாரின் தலையில் பட்டது. அதனை டாஸ் சான்டோஸ் நெஞ்சில் வாங்கிக் கட்டுப்படுத்தி பந்தை எடுத்துச் செல்லும்போது நெதர்லாந்து வீரர் பிளைன்ட் கொடுத்த தொல்லையை கடந்து மேலும் சில ஆரஞ்சு ஷர்ட்களைக் கடந்து பந்தை எடுத்து வந்தார். வந்தவர் கோலை விட்டு விலகிச் செல்வத் போல் தெரிந்தது. ஆனால் பந்தை சரியாக அடித்து கோல் ஆக்கினார். அவரது முதல் சர்வதேச கோல் ஆகும் இது.

அடுத்த நிமிடமே ஆரிபி பெரால்ட்டா 2-0 என்று மாற்றியிருப்பார். அவர் அடித்த பந்து கோலை நோக்கி சுற்றியபடியே சென்றது ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் கோல் விழாமல் பார்த்துக் கொண்டார்.

நெதர்லாந்து கோல்:

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு ஆட்டத்தின் 10வது கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அர்ஜென் ராபின் அடித்தார். ஹன்டிலார் தலையால் பந்தை வாங்கி ஸ்னெய்டரிடம் அடித்தார். அவர் அங்கிருந்து குறுகிய இடைவெளியைப் பயன்படுத்தி 16 அடியிலிருந்து ஒரு ஷாட் அடித்து கோலாக மாற்றினார் நெதர்லாந்து சமன்.

தேவையில்லாத மெக்ஸிகோ ஃபவுலும் நெதர்லாந்தின் வெற்றியும்:

ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டி கடிகாரம் 3:17 என்று காட்டிக் கொண்டிருந்தது. வலது புறம் நெதர்லாந்தின் ஹண்டிலார், ராபின் ஜோடி சேர்ந்தனர். அர்ஜென் ராபின் அப்போது பந்தைக் கடத்தி எடுத்து வந்து மெக்ஸிகோ பாக்ஸிற்குள், அதாவது பெனால்டி பகுதிக்குள் சீறிப்பாய்ந்தார். வேறு வழி தெரியாத மெக்ஸிகோ வீரர் ரஃபேல் மார்க்வேஸ் தனது முட்டிக்காலை அவர் காலுக்கு இடையில் நுழைத்து மறித்தார். நிச்சயமாக அது ஃபவுல்தான். அர்ஜென் ராபினும் இரு குட்டிக் கரணங்களை அடித்து சிறு நடிப்பைக் காட்ட நடுவர் பெனால்டி என்றார்.

ஹன்டிலார் அதனை வெற்றி கோலாக மற்றினார். பிறகு வெற்றிக்களைப்பில் கார்னர் இடத்திலிருந்த பச்சைக் கொடியை காலால் உதைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் மெக்ஸிகோ ரசிகர்கள், பயிற்சியிஆளர், வீரர்கள் பெனால்டி கொடுத்தது தவறு என்று பேசி வருகின்றனர்.

குட்டிக்கரணம் அடித்த அர்ஜென் ராபினை "ஏமாற்றுக்காரன்" என்று விமர்சித்து வருகின்றனர்.

இருந்தாலும் கொளுத்திய வெயிலில் முதன் முதலாக சர்வதேச கால்பந்தாட்டம் ஒன்றில் இருமுறை 'கூல் பிரேக்' விடப்பட்ட நாளில் நெதர்லாந்தின் கடின உழைப்பு உண்மையில் அசத்தல்தான். மெக்ஸிகோவுக்குக் கூட அந்த வெயில் பழக்கப்பட்டிருக்கும், -நெதர்லாந்துக்கு நிச்சயம் அது கூடுதல் வெயில்தான். இந்த நிலையில் ஒரு கோல் பின் தங்கியிருந்து அதன் பிறகு எழுச்சியுற்று தங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது உண்மையில் பாராட்டத்தக்கதே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்