ஜாகார்த்தாவில் நடந்து வரும் இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டியி்ல் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்தார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இன்று நடந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டானனை எதிர்கொண்டார் பி.வி. சிந்து.
54 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இன்டானனிடம் 15-21, 21-9, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து போராடித் தோல்வி அடைந்தார். சிந்துவுக்கு எதிராக தாய்லாந்து வீராங்கனை இன்டானன் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். இதுவரை சிந்துவுடன் மோதி 7 முறை வென்றுள்ளார் இன்டானன் ஆனால், சிந்து 4 முறை மட்டுமேவென்றுள்ளார்.
போட்டி தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடத் தொடங்கிய சிந்து, முதல் செட்டில் 8-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து 15-21 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
» ஐபிஎல் 2022: சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
» பரவும் புதிய கரோனா வைரஸ்: இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா?
ஆனால், 2-வது செட்டில், தாய்லாந்து வீராங்கனை இன்டானன் சிறப்பாகஆடிய சிந்துவுக்கு எந்த வாய்ப்பையும் தரவில்லை. 2-வது செட்டை இன்டாடன் 9-21 என்ற கணக்கில் வென்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டிலும் இன்டானன் ஆதிக்கமே இருந்தது, தொடக்கதிலிருந்தே சிந்துவுக்கு வாய்ப்புஅளிக்காமல் ஆடிய இன்டானன் 5-1 என்ற கணக்கிலும், பின்னர் 16-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இறுதியில்சிந்துவை 14-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இன்டாடன் தகுதி பெற்றார்.
கடந்த அக்டோபர் மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த 20-ம்தேதி நடந்த இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் இப்போது இந்தோனேசியா பாட்மிண்டன் என 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரையிறுதிவரை வந்து சிந்து தோல்விஅடைந்துள்ளார்.
பைனலில் தென் கொரிய வீராங்கனை அன் சி யங்குடன் மோதுகிறார் இன்டாடனன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago