ஐபிஎல் 2022: சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

By ஏஎன்ஐ

ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15-வது ஐபிஎல் டி20 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ம் தேதிக்குள் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன. டிசம்பர் மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுவதால், வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை அணிகள் தயாரித்து வருகின்றன.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை அந்த அணி நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள், 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரைத் தக்கவைக்கலாம். இதில் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3-வது வீரருக்கு ரூ.8 கோடி, 4-வது வீரருக்கு ரூ.6 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டுள்ள வீரர்களை வாங்கும் தொகையான ரூ.90 கோடியிலிருந்து இந்த 4 வீரர்களுக்கான தொகையான ரூ.42 கோடி கழித்துக் கொள்ளப்படும். மீதமுள்ள ரூ.48 கோடியில்தான் வீரர்களை வாங்க முடியும்.


இதில் புதிதாக வரும் லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் ஏலம் தொடங்கும் முன்பே தேர்வுசெய்து தக்கவைத்துக் கொள்ளலாம்.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் பட்டியல் கசிந்துள்ளது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் கரனைத் தக்கவைக்கலாம். டெல்லி கேபிடல்ஸ் சார்பில் ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அக்ஸர் படேல், ஆன்ரிச் நோர்க்கியா தக்கவைக்கப்படலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொலார்டு, இஷான் கிஷன் ஆகியோர் நீடிக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல் தக்கவைக்கப்படலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்