ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பந்தைச்சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் அதிகாரபூர்வ பதவியை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவது 65 ஆண்டுகளில்இதுதான் முதல்முறையாகும். கடைசியாக கடந்த 1956ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் கேப்டனாக இருந்தார். அதன்பின் வேகப்பந்துவீச்சாளர் யாரும் கேப்டனாக நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெயின் பாலியல் சர்ச்சையில் சிக்கியதால் தாமாக முன்வந்து கேப்டன் பதவியைராஜினாமா செய்தார். மேலும், தற்காலிகமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகி இருப்தாகவும் பெயின் தெரிவித்துவிட்டதால், ஆஷஸ் தொடரிலும் விளையாடமாட்டார்.
» நியூஸி டெஸ்ட்: ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா
» ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார்: கவுதம் கம்பீர் விளாசல்
இதையடுத்து, அணிக்கு புதிய கேப்டன் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனையில் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய அணியில் துணைக் கேப்டனாக கம்மின்ஸ் இருந்து வந்தநிலையில் தற்போது கேப்டன் பதவி தரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ பாட் கம்மின் சிறந்த வீரர், தலைமைப்பண்பு உடையவர். அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் அதிகமான மதிப்பைப் பெற்றவர், போட்டியின் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஆஸ்திேரலிய அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸும், துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், “ ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன்.டிம் பெயின் வழங்கிய அதே பொறுப்பான செயல்பாட்டை நானும் வழங்குவேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2017ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மட்டுமல்லாமல் ஒருநாள், டி20 போட்டிகளுக்கும் ஏற்றார்போல் பாட் கம்மின்ஸ் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 35 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கம்மின்ஸ் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago