டி20 சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது ஆஸ்திரேலியா: வார்னர், மார்ஷ் விளாசல்: நியூஸிலாந்து பரிதாபத் தோல்வி

By க.போத்திராஜ்

2021-ம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா முதல்முறையாக வென்றது.

வார்னர், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

50 பந்துகளில் 77 ரன்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு(53, 38 பந்துகள் 3சிக்ஸர், 4பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

டேவிட் வார்னருக்கு பேட்டிங் வரவில்லை, ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஐபிஎல் தொடரில் அணியிலிருந்துநீக்கி அமரவைத்தது. ஏறக்குறைய அணியிலிருந்து நீக்கி, பெஞ்சில் அமரவைத்தது. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் எப்போதும் குறையவில்லை,அது சறுக்கல் மட்டும்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

120 பந்துகளில் 172 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இமாலய இலக்கு என்பதை உணர்ந்துதான் டேவிட் வார்னர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த அதை மார்ஷ் பயன்படுத்திக்கொண்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.

அதிலும் மார்ஷின் நேற்றைய பேட்டிங் என்பது, தில்லுக்கு துட்டு என்ற ரீதியில்தான் இருந்தது.நியூஸிலாந்தைச் சேர்ந்த எந்தப் பந்துவீச்சாளர் வீசினாலும் சிக்ஸர், பவுண்டரி விளாச வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் 3 பந்துகளில் மார்ஷ் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி விளாசியபோதே அவரின் நோக்கம் புரி்ந்துவிட்டது.

டி20 போட்டிகளுக்கென்று ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுடன் அணிகள் களமிறங்கும்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் டி20 சாம்பி்யன் பட்டத்தை 5 டெஸ்ட் ஸ்பெஷலிட்டுகளுடன் வென்றுள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், டேவிட் வார்னர், ஸ்வீட் ஸ்மித் ஆகிய 5 பேரும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வார்னர், மார்ஷ் இருவரின் அற்புதமான பேட்டிங்தான் காரணம். பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், ஆடம் ஸம்ப்பா இருவரும்தான் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டு வீழ்த்தினார். ஸம்ப்பா 4ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

மிட்ஷெல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார், மேக்ஸ்வெலும் தனது பங்கிற்கு ஓவருக்கு 9 ரன்களை வழங்கினார். இருவரும் கட்டுக்கோப்பாகப்பந்துவீசியிருந்தால் இன்னும் 20 ரன்கள் குறைவாக நியூஸிலாந்து அடித்திருக்கும்.

“அக்ரஸிவ் ஆஸ்திரேலியா” என்பதை இந்தப் போட்டியி்ல் நிரூபித்துவிட்டனர்.

நியூஸிலாந்து அணியும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்தான். 172 ரன்கள்அடித்தும் டிபென்ட் செய்ய முடியவில்லையே எனும் ஆதங்கம் இருக்கும் என்பதில் நியாயம்தான். ஆனால், ஆடுகளம் சேஸிங்கிற்கு அற்புதமாக ஒத்துழைத்தது. பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்ஸ்மேன் அடிக்கும் வகையில் எழும்பு நன்றாக வந்ததால், சேஸிங் எளிதாக இருந்தது. அதனால்தான் வார்னர், மார்ஷ் எந்தபக்கம் பேட்டை சுழற்றினாலும் சிக்ஸர்,பவுண்டரி சென்றது.

ஐசிசி தொடர்கள் என்றாலே நியூஸிலாந்து அணி “அன்டர்டாக்ஸ்” என்ற ரீதியில்தான் ஒவ்வொருபோட்டியையும் கடந்து செல்கிறார்கள். 2015ம் ஆண்டு இறுதிப்போட்டி, 2019ம் ஆண்டு இறுதிப்போட்டி, 2021 இறுதிப்போட்டி என பைனலி்ல் வாய்ப்பைக் கோட்டைவிட்டுள்ளனர்.

அதிலும் 2015-50 ஓவர்கள் உலகக்கோப்பை, 2021 டி20 கோப்பையில் ஆஸ்திேரலியாவிடம்தான் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐசிசி சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டுமே நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் அந்த அணியின் கேப்டன் கேன் வி்ல்லியம்ஸன் தனது பேட்டிங்கை எந்த கியரிலிருந்தும் உடனடியாக டாப் கியருக்கு மாற்ற முடியும் என்பதை நேற்று நிரூபித்தார்.

அணி்க்கு நங்கூரமிடும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் தன்னால் அதிரடி ஆட்டத்தையும் வெளி்ப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அதிலும் ஸ்டார்க் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அடித்த 4 பவுண்டரி ஒருசிக்ஸர் அவரின் அதிரடி ஆட்டத்துக்கு சான்று. 48 பந்துகளில் 85 ரன்கள்(3சிக்ஸர்,10பவுண்டரி) சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்ஸனும் தொடக்கத்தில் நிதானமாகவே பேட் செய்தார். முதல் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே வில்லியம்ஸன் சேர்த்திருந்தார். அதன்பின் தனது பேட்டிங் உத்திய மாற்றிய வில்லியம்ஸன் அதிரடிக்கு மாறி அடுத்த 31 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை முதல் 10 ஓவர்களில் ரன் ஏதும் பெரிதாகச் சேர்க்காமல் வீணடித்துவிட்டனர். 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆனால் கடைசி 10 ஓவர்களில்தான் அதிரடியாக ஆடி 115 ரன்கள் சேர்த்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்தில் 35 பந்துகளில் 28 ரன்களும், மிட்ஷெல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியதால் சீராக ரன்ரேட் உயர்ந்தது. பவர் ப்ளேயில் 43 ரன்கள், 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது ஆஸ்திரேலிய அணி.

நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை சுழற்பந்துவீச்சாலர் இஷ் சோதி அரையிறுதி, லீக் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிவிட்டு இறுதிப்போட்டியில் சொதப்பிவி்ட்டார். சோதி 3 ஓவர்கள் வீசி 40 ரன்களை வழங்கினார். சான்ட்னர் 3 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்தார். சவுதி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களும், மில்னே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் என கட்டுக்கோப்பாகப் பந்துவீசத் தவறினர். போல்ட் மட்டுமே 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.

பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தும் அதை டிபென்ட் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள்தவறிவிட்டனர் என்றுதான் கூற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்