இன்னும் 30 ரன்கள்தான் தேவை: புதிய மைல்கல்லை நெருங்கும் டேவிட் வார்னர் 

By செய்திப்பிரிவு


டி20 உலகக் கோப்பையில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இன்னும் 30 ரன்கள் சேர்்த்தால் மிகப்பெரிய மைல்கல்லை எட்டுவார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று துபாயில் நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்்த்து நியூஸிலாந்து அணி மோதுகிறது. இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6 இன்னி்ங்ஸ்களில் ஆடி 236 ரன்கள், சராசரியாக 59.50 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 30 ரன்கள் சேர்த்தால், ஆஸ்திரேலியாவின் இரு ஜாம்பவான்கள் சாதனையை வார்னர் முறயடிப்பார்.

முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹேடன், ஷேன் வாட்ஸன் இருவரும் டி20 போட்டியில் ஒரே உலகக் கோப்பையில் தங்கள் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்துள்ளனர். மேத்யூ ஹேடன் 2007 உலகக் கோப்பையில் 6 இன்னிங்ஸில் 265 ரன்கள் சேர்த்துள்ளார்.

2012ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் வாட்ஸன் 249 ரன்கள் சேர்த்துள்ளார். வாட்ஸன், ஹேடனின் சாதனையை முறியடிக்க வார்னருக்கு 30 ரன்களும் தேவைப்படுகிறது. வார்னர் 30 ரன்களை எட்டவிட்டால், ஒரு உலகக் கோப்பையில் ஆஸ்திேரலிய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

டி20 போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்தவர்கள் வரிசையில் வார்னர் தற்போது 6-வது இடத்தில் உள்ளார். வார்னர் தற்போது 87 இன்னிங்ஸ்களில் 2501 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 14 ரன்களை வார்னர் சேர்த்தால், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் 2,507, ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸின் 2,514 ரன்கள் சாதனையை வார்னர் முறியடிப்பார்.

ஐபிஎல் டி20 தொடரில் வார்னர் பேட்டிங் ஃபார்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் 2-வது சுற்று தொடரில் களமிறக்காமல் பெஞ்சில் அமரவைத்தது. ஏறக்குறைய அந்த அணியிலிருந்து வார்னரை நீக்கும் அளவுக்குச் சென்றது. ஆனால், தற்போது டி20 உலகக் கோப்பையில் ரன் குவிப்பில் முன்னணி பேட்ஸ்மேனாகவார்னர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE