விராட் கோலியின் 10 மாத பச்சிளங்குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐஐடி பொறியாளர் கைது

By செய்திப்பிரிவு


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10மாத பச்சிளங் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டிலும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர், அதைக் கண்டித்த கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர் கோலியின் 10மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த மிரட்டல் பெரும்வைரலாகி, விவாதப்பொருளானது, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன.

இதையடுத்து, மும்பை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினார். போலீஸார் நடத்திய விசாரணையில்தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அகுபதினி ராம் நாகேஷ் எனத் தெரியவந்தது.

சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நாகேஷ் பணியாற்றி வந்த அவரைமும்பை போலீஸார் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர். மும்பை போலீஸாருக்கு உதவியாக இந்திராகரன் காவல்நிலைய அதிகாரிகளும் உடன் வந்தனர்.

போலீஸார் கூறுகையில், “ கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்து கைது செய்தோம். அவர் மீது ஐபிசி பிரிவு 374(ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்

யார் இவர்?

ஹைதராபாத் ஐஐடியில் கடந்த 2019ம் ஆண்டு இளநிலை பொறியியல் படித்து முடித்த அகுபதினி அந்தஆண்டே மிக உயர்ந்த ஊதியத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி கிடைத்தது. பெங்களூருவில் பணியாற்றி வந்த அகுபதினி, கரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்குவந்தார்.
குட்டள்ளி நாராயணா இன்டர்மீடியேட் கல்லூரியில் படித்த அகுபதினி 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்று ஹைதராபாத் ஐஐடியில் சேர்ந்தார். சாதாரண நடுத்தரக் குடும்பத்தை் சேர்ந்த அகுபதினியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மத்தியபாதுகாப்புத்துறையின் ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் குடும்பம் சங்காரெட்டி மாவட்டத்தில் எட்டுமெய்லாராம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE