ஐசிசி டி20 தரவரிசை: ராகுல் முன்னேற்றம்: கோலிக்கு பெரிய சறுக்கல்

By ஏஎன்ஐ


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலி்ல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் கேஎல். 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார், விராட் கோலி 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடாத கேஎல் ராகுல் , நமிபியா, ஸ்காட்லாந்து, ஆப்கன் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்தார்.

இதையடுத்து 727 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு கேஎல்.ராகுல் முன்னேறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அரைசதம் அடித்த விராட் கோலி, அதன்பின் நடந்த போட்டிகளில் சொதப்பியதால், 698 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ரம், பேட்ஸ்மேன் தரவரிசையில் 796 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் மார்க்ரம் 7-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டூசென் முதல் முறையாக பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நுழைந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 94 ரன்கள் விளாசியதால் தரவரிசையில் டூசென் டாப்-10 வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸம்ப்பா 5-வது இடத்திலும், ஹேசல்வுட் 8-வது இடத்துக்கும் நகர்ந்தனர். மிகப்பெரிய முன்னேற்றமாக தென் ஆப்பிரிக்க வீரர் டிம் சவுதி 9-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் 3இடங்கள் நகர்ந்து 4-வது இடத்துக்கும், மிட்ஷெல் மார்ஷ்9-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்