ஜெய்ப்பூரில் வரும் 17-ம் தேதி நடக்கும் இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டியைக் காணவரும் ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது செலுத்தியிருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று ராஜஸ்தான் கிரி்க்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது
இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. நாட்டில்கரோனா வைரஸ் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், கரோனா பரவல் அச்சம் இன்னும் முழுமையாக நீங்காததால், பார்வையாளர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் மகேந்திர சர்மா கூறுகையி்ல் “ இந்தியா, நியூஸிலாந்து டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்ற அரசு உத்தவிட்டுள்ளது. இதன்படி போட்டியைக் காணவரும் ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
முதல்டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் போட்டிையக் காண வரும்போது 48 மணிநேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
ரசிகர்கள் வரும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கைவசம் சானிடைசர் கொண்டுவர வேண்டும். ரசிகர்கள் வரும்போது தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு போட்டியைக் காண அனுமதியில்லை. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப்பின் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டி நடப்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கரோனா பாதுகாப்பு வழிகள், விதிகளை ரசிகர்கள் எவ்வாறு கடைபிடிப்பது, போட்டியை எவ்வாறு சிறப்பாக நடத்துவது, தயாராவது குறித்து ஆலோசனை நடத்தி வழிகாட்டல்கள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago