அடுத்த 9 மாதங்களுக்கு ரொம்ப பிஸி: இந்திய அணி விளையாட உள்ள கிரிக்கெட் தொடர்கள் எவை?

By செய்திப்பிரிவு


இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக் கூட செல்லாமல் வெளியேறிய நிலையில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தொடர்ந்து உள்நாட்டு வெளிநாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட இடைவெளியில்லாமல் விளையாடுகிறார்கள்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை மிகுந்த எதிர்பார்ப்புடன் அணுகியது. ஆனால் பாகிஸ்தான் அணியிடம் 10விக்கெட்டில் தோல்வி, நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டில் தோல்வி அடைந்தவுடனே அரையிறுதி வாய்ப்பு கருகியது. கத்துக்குட்டி அணிகளான நமிபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை மட்டும் வென்று இந்திய அணி நாடு திரும்புகிறது.

ஒரு சிறிய இடைவெளியுடன் இந்திய அணி அடுத்த கிரிக்ெகட் தொடருக்கு தயாராகிவிடும். நவம்பர் 17ம் தேதி முதல் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி, அதைத் தொடர்ந்து 2022 ஜூலை மாதம் வரை தொடர்ந்து போட்டிகளில் விளையாட உள்ளது.

அதுகுறித்த பார்வை

நியூஸிலாந்து தொடர்

நியூஸிலாந்து அணி வரும் 17ம் தேதி முதல் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத்தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. நவம்பர் 17ம் தேதி ஜெய்ப்பூரில் முதல் டி20 போட்டியும், 2-வது ஆட்டம் 19ம் தேதி ராஞ்சியிலும், 3-வது ஆட்டம் கொல்கத்தாவில் 21ம் தேதியும் நடக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நவம்பர் 25 முதல் 29 வரையிலும் 2-வது போட்டி டிசம்பர் 3 முதல் 7ம் தேதிவரை மும்பையிலும் நடக்கிறது.

அதன்பின் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியஅ ணி அந்நாட்டு அணியுடன் முழுமையான தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

தென் ஆப்பிரி்க்கத் தொடர் விவரம்

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி டிசம்பர் 12 முதல் 21ம் தேதிவரை ஜோகன்னஸ்பர்க் நகரில் முதல் டெஸ்ட் போட்டியி்ல் விளையாடுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் பாக்ஸிங் டே டெஸ்டாக டிசம்பர் 26 முதல் 30ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 2022 ஜனவரி 3 முதல் 7ம் தேதி வரை கேப் டவுனில் நடக்கிறது

இந்த 3 டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.
அதன்பின் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 2022, ஜனவரி 11ம்தேதி முதல் ஒருநாள் போட்டி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே பார்ல் நகரில் நடக்கிறது. 2-வது ஆட்டம் கேப் டவுனில் ஜனவரி 14ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் ஜனவரி 16ம் தேதி நடக்கிறது

அதன்பின் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் கேப் டவுன் நகரில் 3 டி20 போட்டிகளும், பார்ல் நகரில் 25ம் தேதி 4-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரி்காவுடன் இந்திய அணி மோதுகிறது.

மே.இ.தீவுகள் தொடர்

இந்தத் தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது இந்திய அணி. அதன்பின் மே.இ.தீவுகள் அணி இந்தியா வருகிறது. அந்த அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. 10 நாட்கள் இடைவெளிக்குப்பின், இந்தத் தொடர் பிப்ரவரி 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

அகமதாபாத்தில் பிப்ரவரி 6ம் தேதி மே.இ.தீவுகள், இந்திய அணிக்கு இடையே முதல் ஒருநாள் ஆட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் பிப்ரவரி 9ம் தேதி 2-வது ஆட்டமும், 12-ம் தேதி கொல்கத்தாவில் 3-வது ஆட்டமும் நடக்கிறது.

அதன்பின் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 15ம் தேதி கட்டாக்கில் இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நடக்கிறது. அதைத்தொடர்ந்து பி்ப்ரவரி 18ம் தேதி விசாகப்பட்டிணத்தில் 2-வது போட்டியும், 20ம்தேதி திருவனந்தபுரத்தில் 3-வது ஆட்டமும் நடக்கிறது.

இலங்கை அணி வருகை

மே.இ.தீவுகள் தொடர் முடிந்தபின் இலங்கை அணி இந்தியா பயணம் செய்து டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான தொடர் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது.
பெங்களூருவில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1ம் தேதி வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. 2-வது டெஸ்ட்போட்டி மொஹாலியில் மார்ச் 5 முதல் 9ம் தேதிவரை நடக்கிறது

டெஸ்ட் தொடர் முடிந்தபின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. மொஹாலியில் மார்ச் 13ம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது, 2-வது டி20 போட்டி தர்மசலாவிலும், 3-வது ஆட்டம் மார்ச் 18ம் தேதி லக்னோவிலும் நடக்கிறது.

ஐபிஎல் டி20 தொடர்

அதன்பின் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் 15-வது சீசன் தொடங்கிவிடும். அதில் இந்திய வீரர்கள் பங்கேற்பதால் இரு மாதங்கள் அதில் பரபரப்பாகக் காணப்படுவார்கள்.

தென் ஆப்பிரிக்கா இந்தியா வருகை

ஐபிஎல் தொடர் முடிந்தபின் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வருகிறது. இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.

சென்னையில் ஜூன் 9ம் தேதி முதல் டி20 போட்டி இரு அணிகளுக்கு இடையே நடக்கிறது. 2-வது ஆட்டம் ஜூன் 12ம் தேதி பெங்களூருவிலும், 3-வது போட்டி 14்ம் தேதி நாக்பூரிலும், 4-வது ஆட்டம், ராஜ்கோட்டில் 17ம் தேதி நடக்கிறது. கடைசி மற்றும் 5-வது ஆட்டம் 19ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

இந்திய அணி இங்கிலாந்து பயணம்

இந்தத் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி கரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அந்த கடைசி டெஸ்ட் போட்டியையும் அதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.

ஜூலை 1 முதல் 5ம் தேதிவரை பிர்மிங்ஹாமில் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து ஜூலை 7ம் தேதி சவுத்தாம்டனில் முதல் டி20 போட்டியும், 9-ம் தேதி பிர்மின்ஹாமில் 2-வது ஆட்டமும், நாட்டிங்ஹாமில் 10ம் தேதி கடைசிப் போட்டியும் நடக்கிறது. ஜூலை 12ம் தேதி லண்டனில் முதல் ஒருநாள் ஆட்டமும், 14ம் தேதிலண்டனில் 2-வது ஒருநாள் ஆட்டமும் நடக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்