கொல்கத்தா பிட்சில் பாகிஸ்தான் அணியின் பரிச்சயம் இந்திய அணியை பாதிக்கும்: சுனில் கவாஸ்கர்

By இரா.முத்துக்குமார்

கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சுனில் கவாஸ்கர் இது பற்றி கூறும்போது, “பாகிஸ்தான் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளனர். பயிற்சி ஆட்டத்தையும் கொல்கத்தாவில் ஆடியுள்ளனர்.

எனவே இந்தியாவுக்கு பரிச்சயமான நிலைமைகள் என்றாலும் இப்போதைக்கு பாகிஸ்தான் அணியும் நிலைமைகளை நன்கு அறிந்த அணியாகவே உள்ளது. வரும் சனிக்கிழமை இந்திய அணியை எதிர்கொள்ளும் போது இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பது இந்திய அணிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தங்களை நிரூபிக்க விரும்புவர். ஷாகித் அப்ரிடி மற்றும் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் நன்றாக விளையாட முனைப்பும், ஊக்கமும் காட்டி வருகின்றனர்” என்றார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததில்லை. எனவே அந்த அணி தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருக்கும், மாறாக இந்திய அணி எதிர்பாராத தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்