டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சூப்பர்-12 சுற்்று ஆட்டம்தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக அதிகபட்சம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
கடந்த மாதம் 24-ம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 2 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்திப்பதால், இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்ற, உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களாகலும் இந்தப் போட்டி பெரிதும் ஈர்க்கப்பட்டது, எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து நியூஸிலாந்து அணியிடமும்8 விக்கெட்டில் இந்திய அணி தோற்றதால், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தியா, பாகிஸ்தாந் கிரிக்கெட் போட்டியை உலகெங்கும் 16.70 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இன்றுவரை டி20 போட்டிகளிலேயே அதிகமாக பார்த்து ரசிகப்பட்ட போட்டியாக இது இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இ்ந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிதான் ரசிகர்களால் அதிகமாகப் பார்கப்பட்ட போட்டியாக இருந்தது.
இந்தப் போட்டியை 13.60கோடி ரசிகர்கள் பார்த்தனர்.அந்த சாதனையையும் தற்போது, இந்தியா, பாகிஸ்தான் போட்டி முறியடித்துவிட்டது. டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்டது கடந்த வாரம்வரை உலகெங்கும் 23.80 கோடி ரசிகர்கள் பார்த்து ரசி்த்துள்ளனர் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இரு போட்டிகளில் இந்திய அணி தோற்றாலும் அடுத்தடுத்த 3 போட்டிகளில் வென்று, வெற்றியுடன் தாயகம் திரும்புகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago