நடப்பு சாம்பியனுக்கு நேர்ந்த கதி: 2022 டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு ஆப்கன், வங்கம் நேரடி தகுதி

By செய்திப்பிரிவு


ஆஸ்திரேலியாவில் 2022ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக விளையாட ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆனால், நடப்பு டி20 சாம்பியனான மே.இ.தீவுகள் அணி, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தகுதித்சுற்றில் விளையாடித்தான் வர வேண்டும். இலங்கை அணியும் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் அணி மற்றும் 2-வது இடம் பெறும் அணிகள், மற்றும் தரவரிசையில் 6 இடங்களில் இருக்கும் அணிகளை வைத்து அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தகுதியான அணிகள் முடிவு செய்யப்படும். அதாவது சூப்பர்-12 சுற்றில் நேரடியாகவிளையாடும் அணிகள் முடிவு செய்யப்படும்.

அந்தவகையில் இங்கிலாந்து, பாகி்ஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் 6 இடங்களில் இருப்பதால், அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக விளையாடத் தகுதி பெறும்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, டி20 தரவரிசையில் 10-வது இடத்துக்குச் சரிந்தது. இலங்கை அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஆனால், வங்கதேச அணி டி20 உலகக் கோப்பைப்போட்டித் தொடரில் மோசமான தோல்விகளைச் சந்தித்தாலும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதால், தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பதால், இரு அணிகளும் சூப்பர்-12 சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றன.

ஆனால் இருமுறை சாம்பியன் நடப்பு சாம்பியனான மே.இ.தீவுகள் அடுத்த ஆண்டு தகுதிச்சுற்றில் விளையாடித்தான் பிரதானச் சுற்றுக்கு வர வேண்டும். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 5 போட்டிகளில் 4 ஆட்டங்களி்ல் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களில் மே.இ.தீவுகள் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

ஆனால், இலங்கை அணி, தனது லீக் ஆட்டங்களில் வங்கதேசத்தையும், மே.இ.தீவுகள் அணியையும் வென்றது, ஆனால், இங்கிலாந்து,தெ.ஆப்பிரிக்கா, ஆஸ்திேரலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்விஅடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்