டெஸ்ட் கிரிக்கெட்டில் விவிஎஸ் லட்சுமண், ராகுல் திராவிட் பார்ட்னர்ஷிப் பல வெற்றிகளை இந்திய அணிக்குப் பெற்றுக் கொடுத்த நிலையில் பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் ஒன்றுசேர உள்ளனர்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, மூத்த நிர்வாகிகள் பலரும் திராவிட் இந்திய அணிக்குப் பயிற்சியளராகச் சென்ற நிலையில் என்சிஏ தலைவராக விவிஎஸ் லட்சுமணை நியமிக்கக் கோருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரோடு என்சிஏ தலைமையும் நெருக்கமாக, இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் திராவிட்டும், விவிஎஸ் லட்சுமணும் இணைந்தால், இந்திய அணிக்கு எதிர்காலத்தில் நல்ல வீரர்கள் கிடைப்பார்கள், வலுவான தளம் அமைக்கப்படும். சவுரவ் கங்குலி, ஜெய் ஷா இருவருமே விவிஎஸ் லட்சுமண் என்சிஏ இயக்குநராகப் பொறுப்பேற்க விரும்புகிறார்கள். ஆனால், லட்சுமணுக்கு குழந்தைகள் சிறிய வயதில் இருப்பதால், முழு நேரமாக இந்தத் தொழிலுக்கு வருவதில் தயக்கம் காட்டி வருகிறார்.
ஆனால், என்சிஏ இயக்குநர் பதவிக்கு லட்சுமண் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறார். திராவிட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர், சிறந்த நண்பர்கள் என்பதால் பயிற்சியாளராக திராவிட்டும், என்சிஏ தலைவராக லட்சுமணும் இருந்தால் சிறப்பான தளமாக இளைஞர்களுக்கு அமையும். இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட்டுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சப்படும் என்று பிசிசிஐ நம்புகிறது” எனத் தெரிவிக்கின்றன.
ஆனால், என்சிஏ இயக்குநராகத் தனது பெயர் பரிசீலிக்கப்படுவது குறித்து இதுவரை விவிஎஸ் லட்சுமண் தரப்பில் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 1990 முதல் 2000-ம் ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமண், சச்சின், கங்குலி ஆகிய 4 பேரும் தூண்களாக விளங்கினர்.
இதில் இந்திய அணியின் நடுவரிசையில் களமிறங்கும் லட்சுமண், திராவிட் கூட்டணி பல மிகப்பெரிய ஸ்கோரையும், பல வெற்றிகளையும் இந்திய அணிக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதில் மறக்க முடியாதது, கொல்கத்தாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திராவிட், லட்சுமண் அமைத்த பார்ட்னர்ஷிப்பாகும்.
இதுபோன்ற பல பார்ட்னர்ஷிப்களை இருவரும் அமைத்து வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளனர். இப்போது பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்தால், இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என பிசிசிஐ நம்புகிறது
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் திராவிட் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பொறுப்பேற்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago