ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் க்ரீவ்ஸ் பந்துவீசும்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் உங்கள் பின் இருக்கிறது என்பதை மறந்துடாதீங்க என்று விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது வைரலாகி வருகிறது.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து. மிகவும் நெருக்கடியாகச் சென்ற ஆட்டத்தில் கடைசி நேரத்தில் வெற்றியைக் கோட்டைவிட்டது ஸ்காட்லாந்து.
இந்த ஆட்டம் ஸ்காட்லாந்துக்கும், நியூஸிலாந்துக்கும் முக்கியமானதோ இல்லையோ இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி மட்டும் தோல்வி அடைந்திருந்தால், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
» இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்: ஊதியம் இதுவரையில்லாத அதிகம்
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணியை நல்ல ரன் ரேட்டில் இந்திய அணி வென்றுவிட்டதால், அடுத்துவரும் 2 போட்டிகளையும் நல்ல ரன் ரேட்டில் வென்று அரையிறுதிக்குள் செல்ல முடியும்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தின் 7-வது ஓவரின் போது, ஸ்காட்லாந்து பந்தவீச்சாளர் கிறிஸ் க்ரீவ்ஸ் பந்துவீசினார்.
அப்போது விக்கெட் கீப்பர் மேத்யூ, ஸ்டெம்ப் அருகே சென்று, க்ரீவ்ஸ் கவனமாகப் பந்துவீசு, ஒட்டுமொத்த இந்தியாவும் உன் பின்னால் இருக்கிறது என்று சத்தமிட்டார். இது ஸ்டெம்ப்பில் உள்ள மைக்கில் பதிவானது.
ஸ்காட்லாந்து வீரருக்குப் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவும் பின்னால் இருக்கிறது என அந்நாட்டு விக்கெட் கீப்பர் சத்தமிட்ட ஒலித்தொகுப்பு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago