வங்கப்புலிகளை விரட்டியடித்த ரபாடா, நோர்க்கியா: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய தென் ஆப்பிரிக்கா

By க.போத்திராஜ்


காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வி்த்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி18.2ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 13.3 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது. குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது, ரன் ரேட் அடிப்படையிலும் ஆஸ்திரேலிய அணியைவிட சிறப்பாகவே இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அதில் அனைத்திலுமே நல்ல ரன்ரேட்டில் வெல்வது அரையிறுதிக்கு செல்லும் வழியாகும். தற்போது ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் மைனஸில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் தங்களின் கடைசி ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 87 ரன்கள் வி்த்தியாசத்தில் தென் ஆப்பிரி்க்க அணி வென்றால் புள்ளிப்பட்டியலி்ல் 8 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்துக்குச் செல்லும் அல்லது சுமார் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்ைதப் பிடிக்கும். ஆஸ்திரேலிய அணி அடுத்துவரும் 3 போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும்.

ஆதலால், தென் ஆப்பிரி்க்க அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது அடுத்த போட்டியில்ல கிடைக்கும் வெற்றியில் உறுதியாகிவிடும். அதேசமயம், குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்க்கியா, காகிசோ ரபாடாதான். ஆடுகளம் கடினமாகவும், புற்கள் நிறைந்து பசுமையாக இருந்ததால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை அறிந்தவுடன் இருவரும் பந்துவீச்சால் வங்கதேச பேட்ஸ்மேன்களை மிரட்டிவிட்டனர்.

தொடக்கத்திலிருந்தே பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், வங்கதேச ேபட்ஸ்மேன்கள் இதுபோன்ற தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடமுடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
மணிக்கு 145 கி.மீ வேகத்தில் இருவரும் லென்-லென்த்தில் பந்துவீசியதால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் செய்வதறியாது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ரபாடா 4 ஓவர்கள்வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். நோர்க்கியா 3.2 ஓவர்கள் வீசி8 ரன்கள் கொடுத்து 3 விக்ெகட்டுகளை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து 29 டாட்பந்துகளை வீசியுள்ளனர். இருவரும் சேர்ந்து வீசிய 7 ஓவர்கள் அதில் ஏறக்குறைய 5ஓவர்கள் டாட் பந்துகளாக வீசியுள்ளனர்.

இது தவிர சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஸி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் கணக்கில் 13 டாட்பந்துகள். வேகப்பந்துவீச்சாளர் பிரிட்டோரியஸ் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் 50 பந்துகளை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் டாட் பந்துகளாக வீசியுள்ளனர்.

வங்கதேச அணிக்கு வீசப்பட்டது 18.2 ஓவர்கள் அதாவது, 110 பந்துகள் இதில் 50 டாட் பந்துகள் வீசப்பட்டன. மீதமுள்ள 10 ஓவர்களில்தான் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடித்தனர்.

85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கி 4 விக்கெட்டுகளை இழந்தது மோசமானது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அசத்தலாக பேட் செய்த குயின்டன் டீ காக் இதுவரை தனது சொந்த அணிக்கு எந்தவிதமான ஸ்கோரையும் செய்யாமல் இருக்கிறார். அனுபவ வீரராகஇருக்கும் டீ காக் தொடக்க வீரராக களமிறங்கி தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த ஆட்டத்தில் டீ காக் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹென்ட்ரிக்்ஸ்(4) வேன்டெர் டூ சென்(22), மார்க்ரம்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் பவுமா 31 ரன்களுடனும், மில்லர் 5 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற வைத்தனர்.

85 ரன்களை சேஸிங் செய்ய 14 ஓவர்கள் வரை தென் ஆப்பிரிக்க எடுத்துள்ளது. இந்த இலக்கை 10ஓவர்களுக்குள் தெ.ஆப்பிரி்க்க அணி சேஸிங் செய்திருந்தால், நிச்சயம் ரன்ரேட் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை தரமான ஆடுகளத்தை தங்கள் நாட்டில் அமைக்காமல் ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து அணியை வென்றுவிட்டோம் என்று மார்த்தட்டியது எவ்வளவு போலி்த்தனமானது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் மூன்றாவது முறையாக 100 ரன்களுக்குள் வங்கதேச அணி சுருண்டுள்ளது.

அபு தாபியில் நேற்று அமைக்கப்பட்ட பந்துவீச்சுக்கு சாதகமான தரமான ஆடுகளத்தில் பேட் செய்யும்போதுதான் வங்கதேச பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஆழம் தெரிய வருகிறது.

வங்கேதச அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அணியில் 2 பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ்(24), மெஹதி ஹசன்(27) இருவர் மட்டுமே இரட்டைப் படை ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்துப் ேபட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில்தான் ஆட்டமிழந்தனர். இதில் 4 பேட்ஸ்ேமன்கள் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
ரபாடா வீசிய 4-வது ஓவரின் 5-வது பந்தில் சவுமியா சர்க்கார்(0), கடைசிப்பந்தில் முஷ்பிகுர் ரஹிம்(0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அடுத்து ஹாட்ரிக் வாய்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், கிடைக்கவில்லை.

வங்கதேச அணியில் அனுபவ வீரர் சஹிப் உல் ஹசன் காயம் காரணமாக உலகக் கோப்பைப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவுதான். இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்காவது சிறப்பாக ஆடியிருக்க வேண்டும்.

ஆனால், பல உலகக் கோப்பைப் போட்டிகளை வங்கதேச அணி சந்தித்த போதிலும் இன்னும் அந்த அணியின் ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியான தன்மை இல்லை. பெரிய அணிகளுக்கு எப்போதாவது அதிர்ச்சித் தோல்வி அளி்க்கும் அணிதான் என்றாலும், எப்போதாவது கிடைக்கும் வெற்றி எதற்கும் உதவாது.

84 ரன்களை அடித்துக்கொண்டு வங்கதேசம் டிபென்ட் செய்துவிடலாம் என்று நினைத்ததும் தவறானது. இது தோல்விக்கான ஸ்கோர் எனத் தெரிந்தபின்பு துணிந்து பந்துவீசி தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் 4 பேரை வெளியேற்றியது. இருப்பினும் போராட்டத்துக்கு வெற்றிகிடைக்கவி்ல்லை. உலகக் கோப்பைத் தொடரிலிருந்தும் வங்கதேசம் வெளியேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்