சர்வதேச போட்டிகளில் தோனி 300 சிக்சர்கள்: சுவையான தகவல்கள்

By இரா.முத்துக்குமார்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹுசனை பதம் பார்த்த தோனி 6 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5-வது வீரரானார் தோனி.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரீடி 469 சிக்சர்களுடன் முதலிடன் வகிக்கிறார்.

இரண்டாவதாக கிறிஸ் கெயில் 423 சிக்சர்களையும், 3-வதாக பிரெண்டன் மெக்கல்லம் 398 சிக்சர்களையும், 4-வதாக சனத் ஜெயசூரியா 352 சிக்சர்களையும் அடித்து முதல் 4 இடங்களில் உள்ளனர். தற்போது 5-வதாக தோனி 300 சிக்சர்களுடன் பட்டியலில் இணைந்துள்ளார்.

தோனிக்கு அடுத்த இடத்தில் ஏ.பி.டிவில்லியர்ஸ் 280 சிக்சர்களுடன் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் 264 சிக்சர்களை அடித்துள்ளார்.

மேலும் 12 சர்வதேச போட்டிகளில் தோனி சிக்சருடன் ஆட்டத்தை வெற்றிக்கு முடித்துள்ளார். இதில் 9 முறை ஒருநாள் போட்டிகளிலும் 3 முறை டி20 போட்டிகளிலும் அவர் சிக்சருடன் வெற்றி பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இலக்கைத் துரத்தும் போது விராட் கோலியின் சராசரி 84.22. அதாவது 16 இன்னிங்ஸ்களில் 758 ரன்களை எடுத்துள்ளார். இதில் 7 முறை ஆட்டமிழக்கவில்லை. இலக்கை நிர்ணயிக்கும் போது கோலியின் சராசரி 35.88.

2014-ம் ஆண்டிலிருந்து டி20யில் இந்தியாவின் வெற்றி தோல்வி எண்ணிக்கை 16-6 ஆகும். மேலும் இலங்கைக்கு எதிரான புனே தோல்விக்குப் பிறகு இந்தியா தொடர்ந்து 7 போட்டிகளில் வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்