டி20 உலகக் கோப்பை அரையிறுதி, ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்? ஷேர்ன் வார்ன் கணிப்பு

By ஏஎன்ஐ


ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள் மோதும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டதைத்தொடர்ந்து இந்த கணிப்பை வார்ன் வெளியி்ட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில்இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் மட்டும்தான் இதுவரை தோல்விகளைச் சந்திக்காமல் செல்கின்றன. மற்ற அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இங்கிலாந்து அணி தான் மோதிய மே.இ.தீவுகள், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்தியா,நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வென்று பாகிஸ்தான் வலிமையுடன் இருக்கிறது. குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியும் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன. இதில் 2-வது அணியாக குரூப்-பிரிவில் நியூஸிலாந்து அல்லது இந்தியா அணி வாய்ப்பைப் பெறுமா என இன்று தெரிந்துவிடும்.

அதேபோல குரூப்-1 பிரிவில் 2-வது அணியாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரி்க்கா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையி கடும் போட்டி நிலவுகிறது. இந்த 3 அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியும்.

இதற்கிடையே ஆஸ்திேரலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் டி20 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணிகள் குறித்துக் கணித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடித்து அரையிறுதி செல்லும் அணிகள், மற்றும் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணிகள் குறித்து நான் கணித்துள்ளேன்.

இந்த அணிகள்தான் அரையிறுதி, பைனலுக்குசெல்லும் என நம்புகிறேன். அந்த வகையில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணியும், பாகிஸ்தானை எதிர்த்து ஆஸ்திேரலிய அணியும் மோதக்கூடும். இறுதிப் போட்டிக்கு இ்ந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அல்லது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

துபாயில் இன்று நடக்கும் நியூஸிலாந்து, இந்தியஅணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக மிகமுக்கியானது. இதில் எந்த அணி தோல்வி அடைகிறதோ அந்த அணி வெளியேறிவிடும். அடுத்து வரும் 3 போட்டிகளையும் நியூஸிலாந்தும், இந்திய அணியும் வென்றாலும் இந்தப் போட்டியில் வெல்லும்தான் அணி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை உறுதி செய்யும். ஆதலால் மிக முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்