நியூஸிக்கு எதிரான மோதல்: இந்திய அணியின்  ப்ளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு? அணியில் மாற்றம் இருக்கும்

By செய்திப்பிரிவு


துபாயில் இன்று மாலைநடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான மோதலில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து அணியும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளன.

இன்று துபாயில் நடக்கும் ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக மிகமுக்கியானதாகும். இதில் எந்த அணி தோல்வி அடைகிறதோ அந்த அணி வெளியேறிவிடும், அரையிறுதிக்குள் செல்லாது. அடுத்து வரும் 3 போட்டிகளையும் நியூஸிலாந்தும், இந்திய அணியும் வென்றாலும் இந்தப் போட்டியில் வெல்லும்தான் அணி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை உறுதி செய்யும். ஆதலால் மிக முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அப்ரிடி இன்ஸ்விங் செய்து, ரோஹித் சர்மா, ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். இதேபோன்ற பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வெளிப்படுத்துவேன் என்று நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் களமிறங்கிய அதே வீரர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.கேப்டன் கோலி புதிய வீரர்களை உள்ளே கொண்டுவரக்கூடு்ம்என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் ரோஹித் மாற்றமில்லை

அந்த வகையில் தொடக்க வீர்கள் வரிசையில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா எந்தவிதத்தும் மாற்றப்படமாட்டார்கள். இருவருமே மேட்ச் வின்னர்கள், ஐபிஎல் தொடரில் இருவருமே அருமையான ஃபார்மில் இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவர் நிலைத்துவிட்டாலே ஸ்கோர் எகிறிவிடும் எதிரணியின் பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் பேட்டிங் செய்யக்கூடியவர்கள் என்பதால், இருவரும் மாற்றப்பட வாய்ப்பில்லை.

சூர்யகுமார் யாதவுக்கு நோ

கேப்டன் விராட் கோலி, அடுத்ததாக சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக இஷான் கிஷன் களமிறங்கக்கூடும் எனத் தெரிகிறது. ஐபிஎல் 2-வது சீசனிலும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவைவிட இஷான் கிஷன் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்டலாம்.

ரிஷப் பந்த்

விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் வழக்கம்போல் தொடர்வார். ரிஷப் பந்துக்கு விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பல்வேறு ஆலோசனைகளை மென்ட்டர் தோனி வழங்கியுள்ளதால் இன்று ரிஷப் பந்த் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடக்கூடும்.

ரவிந்திர ஜடேஜா

ரவிந்திர ஜடேஜாவுக்கு நிச்சயம் அணியில் இடம் உண்டு. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா சொதப்பினாலும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடியவர். இவரின் பந்துவீச்சும் திடீரென விக்கெட் வீழ்த்தும் தன்மை கொண்டது, விக்கெட் சரியும் நேரத்தில் நிதானமாக ஆடக்கூடியவர் என்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு உண்டு.

ஹர்திக் பாண்டியா விஷப்பரிட்சை

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவார். ஹர்திக் பாண்டியா 100 சதவீதம் உடற்தகுதியில்லை. இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது இதில் கூடுதலாக 6-வது பந்துவீச்சாளருடன் களமிறங்குவது பாதுகாப்பானது என்பதால், நிச்சயம் ஹர்திக்பாண்டியாவுக்கு வாய்ப்பு இருக்காது. பேட்டிங்கிலும் பாண்டியா ஃபார்மில் இல்லை, பந்துவீச்சிலும் 2 நாட்களில் எடுத்த பயிற்சி சர்வதேச போட்டிக்கு பயன்படாது. ஆதலால் இந்திய அணி நிர்வாகம் பாண்டியாவுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கும்.

அனுபவ அஸ்வின்

புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ரவிச்சந்திர அஸ்வின் சேர்க்கப்படலாம். கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்குஎதிராக புவனேஷ்வர் குமார் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் பெரிதாக ஏதும் செய்யவில்லை. அனுபவ வீரராகஇருந்தபோதிலும்கூட புவனேஷ்வர் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. துபாய்ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும் அஸ்வின் தான்வீசும் 6 பந்துகளிலும் வேரியேஷனை வெளிப்படுத்தக்கூடியவர், பவர்ப்ளே பந்துவீச்சாளர் என்பதால், அஸ்வினுக்கு இன்று வாய்ப்பு கிடைக்கும்.
மற்றவகையில் வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, பும்ரா இருவரும்இடம்பெறுவதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்