ஜோஸ் பட்லரின் காட்டடி பேட்டிங், ஜோர்டன், வோக்ஸின் பந்துவீச்சு ஆகியவற்றால்துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திேரலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் 3.948 ரன் ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் விஷயத்தில் வாய்ப்பை இங்கிலாந்து அணி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இரு போட்டிகளில் வென்று தென் ஆப்பிரி்க்காவுக்கு இணையாக 4 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில்தான் இருக்கிறது. இதனால், அடுத்துவரும் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று ரன் ரேட்டை உயர்த்த முயற்சிக்கும்
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்று தொடங்கியதிலிருந்து ஒரு அணியின் வெற்றியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுவரை நடந்த 14 போட்டிகளில் 12 போட்டிகளில் டாஸ் வென்ற அணிதான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்குள் 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பை இரு ஐசிசி தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது இங்கிலாந்து அணி. நவம்பர் இறுதியில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் தொடங்க இருக்கும் நிலையில் இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சந்தித்த மிகப்ெபரிய தோல்வி இதுவாகும். அதாவது அதிகமான பந்துகள் வித்தியாசம்(50), அதிகமான விக்கெட்டுகள்(8விக்கெட்டுகள்) வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தப் போட்டியில்தான்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்குக் காரணம ஜோஸ் பட்லரின் அதிரடியும், பந்துவீச்சும்தான். ஜோஸ் பட்லரின் கிளாஸிக்கான ஆட்டத்தை நேற்று ரசிகர்கள் காண முடிந்தது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை கொத்துக்கறி போட்ட பட்லர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். 32 பந்துகளி்ல 71 ரன்களுடன் பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் கணக்கில்5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 221 ஸ்ட்ரைக் ரேட்டை பட்லர் வைத்திருந்தார்.
இங்கிாலந்து அணியினர் பந்துவீச்சிலும் நேற்று பட்டையக் கிளப்பினர். கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் கடந்த ஜூன் மாதம்வரை சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடமல் இருந்த கிறிஸ் வோக்ஸ் இந்த உலகக் கோப்பையில் இடம் பெற்று தன்னை நிரூபித்து வருகிறார். அதிலும் முதல் 3 ஓவர்களில் வோக்ஸ் 7 ரன்கள்மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய வோக்ஸ் 23 ரன்கள் கொடுத்து வார்னர், மேக்ஸ்வெல் என இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 ஸ்பெசலிஸ்ட் ஜோர்டன் நேற்று அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திேரலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். 4ஓவர்கள் வீசிய ஜோர்டன் 17 ரன்கள் வி்ட்டுக்கொடுத்து3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
வழக்கமாக ஆட்டம்தொடங்கியவுடன் மொயின் அலிக்கு புதிய பந்துவீச்சில் பந்துவீச வாய்ப்பளிக்கும் கேப்டன் மோர்கன், இந்த முறை அதில் ரஷித்துக்கு வழங்கினார். தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்த ரஷி்த் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று மோசமாக செயல்பட்ட லிவிங்ஸ்டோன் கடந்த சில போட்டிகளாக சுழற்பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய லிவிங்ஸ்டன் 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணியில் மில்ஸ் மட்டுமே ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்கள் வீசிய மில்ஸ் 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நின்று பட்லர், ஆஸ்திரேலிய அணியை வதம் செய்துவிட்டார்.
126ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பட்லர், ராய் இருவரும் தொடக்கம் முதலே ஆஸ்திரேலியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், ஏகர் ஆகியோரின் பந்துவீச்சு சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. ஸ்டார்க் வீசிய 6-வது ஓவரில் பட்லர் லாங்-ஆன் திசையில் இரு சிக்ஸர்களை விளாசினார்.பவர்ப்ளேயில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
நிதானமாக ஆடிய ஜேஸன் ராய் 22 ரன்களில் ஸம்ப்பா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளிேயறினார். அடுத்து டேவிட் மலான் வந்து பட்லருடன் இணைந்தார். பட்லர் ஆஸ்திேரலியப் பந்துவீச்சை துவைத்து எடுப்பதை நிறுத்தவே இல்லை. ஸ்டார்க் வீசிய 8-வது ஓவரில் 3 பவுண்டரிகளை பட்லர் விளாசி 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆடம் ஸம்ப்பா வீசிய 9-வது ஓவரில் பவுண்டரி, ஒரு சிக்ஸரை பட்லர் நொறுக்கினார். ஏகர் பந்துவீச்சில் 8 ரன்னில் மலான் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து பேர்ஸ்டோ களமிறங்கி,பட்லருடன் சேர்ந்தார்.
ஸம்ப்பா வீசிய11-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர்களையும், பேர்ஸ்டோ ஒரு சிக்ஸர் என 20 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 50 பந்துகள் மீதமிருக்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. பட்லர் 72 ரன்களுடனும், பேர்்ஸ்டோ 16ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை நேற்று பந்துவீச்சும் சரியில்லை, பேட்டிங்கும் மோசமாக இருந்தது. ஆஸியின் டெய்ல்எண்டர்கள் பேட்ஸ்மேன்கள்தான் கடைசி 4ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்து மானத்தைக் காப்பாற்றினர்.
கடந்த போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று பேசப்பட்ட வார்னர் ஒரு ரன்னில் வோக்ஸ்வீசிய டெஸ்ட் மேட்ச் லென்த் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச்கொடுத்தார். மேக்ஸ்வெல்(6) ஸ்மித்(1), ஸ்டாய்னிஷ்(0) நடுவரிசை பேட்ஸ்மேன்கள் காலைவாரினர். பவர்ப்ளேயில் ஆஸி. 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
விக்கெட் கீப்பர் ேமத்யூ வேட், கேப்டன் பின்ச்சுடன் சேர்ந்து ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தினார். வேட் 18 ரன்னிலும், அடுத்துவந்த ஏகர் 20 ரன்னிலும் வெளியேறினர். டெய்ல்எண்டர்களான கம்மின்ஸ்(12) ஸ்டார்க்(13) சேர்த்ததால் ஆஸ்திரேலிய அணி 125 ரன்களை எட்ட முடிந்தது. கேப்டன் பின்ச் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago