இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல் இணைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்றாக இருந்த நாங்கள் ஐந்தாக ஆகியுள்ளோம். நானும் தீபிகாவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அக்குழந்தைகளுக்கு கபிர் பலிக்கல் கார்த்திக், சியான் பலிக்கல் கார்த்திக் என்று பெயரிட இருப்பதாக தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக், தீபிகா பலிக்கல் ஆகியோருக்கு இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
» அன்று ரொனால்டோ இன்று வார்னர்: மேஜையின் மீதிருந்த கோலா பாட்டில்களை அகற்றினார்: திடீரென யு-டர்ன்
தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகலுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
36 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் மட்டுமல்லாது, சையத் முஷ்டாக் அலி டிராபி போன்ற இந்தியத் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணையாளராகவும் இருந்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago