முஜிப், ரஷித் கான் விக்கெட் மழை: 10 ஓவர்களை ஸ்காட்லாந்தை பொட்லம் கட்டிய ஆப்கன்: நிகர ரன்ரேட்டில் சவாலான இடம்

By க.போத்திராஜ்


முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கானின் அற்புதமான பந்துவீச்சால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் குரூப்-2 பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி வேருடன் பிடுங்கப்பட்டு அங்கு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும்போது அந்தநாட்டு அணியினர் இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்க முடியாமல், குரலற்றவர்களாய், நாடிழந்து, சொந்த உறவுகளைக் காணமுடியாமல் மனக்குழப்பத்துடன் இருக்கும் நிலையில் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்த வெற்றியைப் பார்த்தாவது இனிமேல் தலிபான்கள் மாறுவார்களா எனத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானின் டி20 வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்ற போட்டியும் இதுவாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு இதே ஷார்ஜா மைதானத்தில் கென்யா அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்திருந்ததே மிகப்ெபரிய வெற்றியாக இருந்த நிலையில் அதை இந்த வெற்றி முறியடித்துவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 6.500 வைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ரன்ரேட்டேட்டுடன், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு மோதுவது சவாலாக இருக்கும்.

உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்தவர்களாகக் கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான் இருவரும்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

இதில் முஜிப் உர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டி20 உலகக் கோப்பையில் முஜிபுர் ரஹ்மான் முதலாவது 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முஜிப் உர் ரஹ்மான் தான் வீசிய 4-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஸ்காட்லாந்து அணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தினார். அந்த சிரிவிலிருந்து ஸ்காட்லாந்து கடைசிவரை மீளவில்லை. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

துணையாகப் பந்துவீசிய ரஷித் கான்2.2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த இரு பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஸ்காட்லாந்து அணியின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமானஇலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. முன்சே, கேப்டன் கோட்சர் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்து, 3 ஓவர்களில் 27 ரன்கள் சேர்த்தனர்.
முஜிப் உர் ரஹ்மான் வீசிய 4-வது ஓவரில்தான் முதல் சரிவு ஏற்பட்டது. முஜிப் உர் ரஹ்மான் வீசிய 4-வது ஓவரில் கேப்டன் கோட்சர்(10) ரன்னில் போல்டாகினார், அடுத்துவந்த மெக்லாய்ட் கால்காப்பில் வாங்கி வெளியேறினர்.

அடுத்து வந்த பாரிங்டன் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் நடையைக் கட்டினார். 28 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி இருந்த ஸ்காட்லாந்து, அடுத்த சில பந்துகளில் அதே28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் வந்த எந்த பேட்ஸ்மேனும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மிகமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஷித் கான் வீசிய 11-வது ஓவரில் கடைசி வரிசை வீரர்கள் இருவரும் ஆட்டமிழக்க ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அணியின் தொடக்க வீரர்கள் ஹர்சத்துல்லா ஜஜாய், முகமது ஷேசாத் இருவரும் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர்.கடந்த 2019-ம் ஆண்டுக்குப்பின் ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பை முகமது ஷேசாத் பெற்றார்.

நிதானமாக் தொடங்கி பின்னர் இருவரும் அடித்து ஆடத் தொடங்கினர். ஷேசாத் 22 ரன்னில் ஷரீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.முதல் விக்கெட்டுக்கு இருவரும்54 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த குர்பாஸ், ஜஜாயுடன் சேர்ந்தார். ஜஜாய் 44 ரன்னில் வாட் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த ஜாத்ரன், குர்பாஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் அளவில் விளையாடினர். ஸ்காட்லாந்து பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். 12.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய ஆப்கானிஸ்தான், 16.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.

குர்பாஸ், ஜாத்ரன் இருவரும் பவுண்டரி , சிக்ஸர்களாக விளாச ஆப்கானிஸ்தான்ஸ்கோர் எகிறியது. ஜாத்ரன் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். குர்பாஸ் 46 ரன்னில்(4சிக்ஸர்,ஒருபவுண்டரி) ஆட்டமிழந்தார் . இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆப்கானிஸ்தான் 53 ரன்கள் சேர்த்தது.

39 பந்துகளில் 54 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து ஜாத்ரன் ஷரீப் வீசிய கடைசி ஓவர் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து. முகமது நபி 11ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்காட்லாந்து தரப்பில் ஷரீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்