ஸ்டாய்னிஷ், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் தென் ஆப்பிரி்க்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி குருப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திேரலிய வேகப்பந்துவீச்சாளர் ஜாோஸ் ஹேசல்வுட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குக் காரணம் கட்டுக்கோப்பான பந்துவீச்சுதான். டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருந்தால், நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட்ட நிலைமை ஆஸிக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக பந்துவீசினர்.
119 ரன்கள் எனும் இலக்கு எளிதானது என்றாலும் வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு எளிதாக தென் ஆப்பிரிக்க கொடுத்துவிடவில்லை. கடைசிவரை போராடிய தென் ஆப்பிரிக்க அணி 2 பந்துகளில்தான் ஆட்டத்தைக் கோட்டைவிட்டது.
கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஷ், மேத்யூ வேட் களத்தில் இருந்தனர். தனது 3 ஓவர்களை சரியாக வீசிய நோர்க்கியா இந்த ஓவரில் சொதப்பிவிட்டார். 19-வது ஓவரை வீசிய நோர்க்கியா 4 பந்துகளை கட்டுக்கோப்பாகவீசிவிட்டு, 5-வது பந்தை ஸ்லோபாலாக வீச ஸ்டாய்னிஷ் பவுண்டரி அடித்தார். இதனால் இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. இந்த பவுண்டரி மட்டும் அடிக்கவிடாமல் இருந்திருந்தால், ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் கரங்களுக்குச் சென்றிருக்கும்.
கடைசி ஓவரில் ஆஸி. வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பிரி்ட்டோரியஸ் வீசிய முதல் பந்தில் ஸ்டாய்னிஷ் 2 ரன்களும், அடுத்தபந்தில் பவுண்டரியும் விளாசினார். கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. 3-வதுபந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை,4-வது பந்தில் ஸ்டாய்னிஷ் பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலியஅணி வென்றது.
ஸ்டாய்னிஷ் 16 பந்துகளில் 24 ரன்களுடனும்,மேத்யூ வேட்10 பந்துகளில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியைவெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை வெற்றியை எளிதாக யாருக்கும்விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதை இந்தப் போட்டியில் புரியவைத்தனர். குறைந்த ஸ்கோராக இருந்தாலும், அதை கேப்டன் பவுமா சரியாக டிபென்ட் செய்தார். பந்துவீச்சாளர்களை சரியாக ரொட்டேட் செய்து, எந்தெந்த பேட்ஸ்மேன்களுக்கு எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தினார்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை நாங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வலிமையானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர். ஆனால், 118 ரன்களை சேஸ் ெசய்ய கடைசி ஓவர் வரை எடுத்துக்கொண்டது, பேட்டிங் திறனையை இன்னும் கேள்விக்குள்ளாக்குகிறது. முன்னணி பேட்ஸ்மேன்கள் வார்னர், பின்ச், மார்ஷ் இன்னும் ஃபார்முக்கு வராதது அடுத்தடுத்தபோட்டிகளில் பெரும் சிக்கலாக உருவெடுக்கும்.
கடந்த இந்தியத் தொடரிலிருந்து வார்னர் பலப் போட்டிகளில்பங்கேற்றும் இன்னும் பழைய ஃபார்முக்கு திரும்பவில்லை. ஆரோன் பின்ச் காயத்திலிருந்து மீண்டதுமுதல் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்கவில்லை. மார்ஷ் வங்கதேசத் தொடரில் சிறப்பாக விளையாடினார், ஆனால், இதில் சொதப்பிவி்ட்டார்.
மேக்ஸ்வெல்லின் ஆல்ரவுண்ட் திறமை இந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் கை கொடுத்தது. ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இருந்த மேக்ஸ்வெல் அந்த சார்ஜ் குறையாமல் இந்தப் போட்டியிலும் செயல்பட்டது பெரியபலம். சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா, ஆஸ்டன் அகர் இருந்தபோது, மேக்ஸ்வெலை நம்பி ஆரோன் பின்ச் பந்துவீச வாய்ப்பளித்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றினார்
மற்றவகையில் ஹேசல்வுட், கம்மின்ஸ் இருவருமே கட்டு்க்கோப்பாகப் பந்துவீசினர். தொடக்க வீரர் டீ காக், டூசென் இருவரின் விக்கெட்டையும் ஹேசல்வுட் எடுத்து, பெரிய நி்ம்மதியளித்தார். ஆஸ்திரேலிய அணி்யின் பெரும்பாலான வீரர்களை தொடர்ந்து ஃபார்மில் வைத்திருக்க ஐபிஎல் தொடர் பெரிதும் உதவியுள்ளது.
118 ரன்கள் என்பது டிபென்ட் செய்ய முடியாத ஸ்கோர் என்றாலும், கூடுதலாக இன்னும் 20 ரன்கள் சேர்த்திருந்தால், ஆட்டம் தென் ஆப்பிரி்க்கப்பக்கம் திருப்பியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஐபிஎல் தொடரிலிருந்தே பேட்டிங் ஃபார்மில்லாமல் தவித்துவந்த வார்னர்(14) விக்கெட்டை ரபாடாவும், ஆரோன் பின்ச் விக்கெட்டை நோர்க்கியாவும் வீழ்த்தி தொடக்கத்திலேயே நெருக்கடி கொடுத்தனர்.
மிட்ஷெல் மார்ஷை 11ரன்னில் கேசவ் மகராஜ் வெளியேற்றினார். 38ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணியும் தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஜோடி அணியைத் தூக்கி நிறுத்தினர். ஐபிஎல் தொடரிலிருந்து நல்ல ஃபார்மில் இருந்த மேக்ஸ்வெல், எளிதாக பந்துவீச்சைக் கையாண்டார்.
ஸ்மித் 35 ரன்களில் நோர்க்கியா பந்துவீச்சில் மார்க்கிரமால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். மார்க்ரம் பிடித்த கேட்ச்தான் ஆட்டத்தை நெருக்கடிக்கு தள்ளியது. பீல்டிங்கில் சிறந்தவர்கள் என்பதை மார்க்ரம் தனது கேட்ச் மூலம் நிரூபித்தார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்மித், மேக்ஸ்வெல் ஜோடி, 42ரன்கள் சேர்்த்துப் பிரிந்தனர்.
ஸ்மித் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் மேஸ்க்வெல் 18 ரன்னில் ஷம்ஸி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஷ், மேத்யூ வேட் ஜோடி சேர்ந்து அணியை ெவற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர், நடுவரிசை நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் ஸ்கோர் செய்ய முடியவில்லை. கேப்டன் பவுமா நல்ல தொடக்கம் கொடுத்தபோதிலும் அதன்பின் மேக்ஸ்வெல் பந்துவீச்சை அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டி காக்(7), வேன்டர் டூசென்(2) ஆட்டமிழந்தநிலையில் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. 23 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. பவரப்ளேயில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
மார்க்ரம்(40) மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். 13 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென் ஆப்பிரிக்கா. ஸ்கோர் சென்ற விதத்தைக் கணக்கிடும்போதும், அடுத்து பேட்ஸ்மேன்கள் இருந்ததைக் கணக்கிட்டு அடுத்த 7 ஓவர்களில் 60 ரன்களை அடிப்பார்கள் என கணக்கிடப்பட்டது. ஆனால், அடுத்த 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா.
நடுவரிசையில் களமிறங்கிய மில்லர்(16), கிளாசன்(13) ரன்களில் சொற்பமாக ஆட்டமிழந்தனர். ஐபிஎல் தொடரில் மில்லரை நம்பி எடுத்த ராஜஸ்தான் அணி கையைச் சுட்டுக்கொண்டது, இன்னும் தென் ஆப்பிரிக்க அணியில் மில்லர் தொடர்கிறார். கடைசி வரிசை பேட்ஸ்மேன்களான பிரிட்டோரியஸ்(1), நோர்க்கியா(2),மகராஜ்(0) என வீழ்ந்தனர்.
ரபாடா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ஒருசிக்ஸர், பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தார். இவர் சேர்த்த இந்த 19 ரன்களால்தான் தென் ஆப்பிரிக்க 118ரன்கள் இலக்கை அடைந்தது. இல்லாவிட்டால் 100 ரன்களுக்குள் ஆட்டம் முடிந்திருக்கும்.ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேசல்வுட், ஆடம் ஸம்ப்பா, ஸ்டார்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago