நடப்பு சாம்பியன் பட்டத்தை மறந்திருங்க: மே.இ.தீவுகளுக்கு சம்மட்டியடி கொடுத்த இங்கிலாந்து: பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் அம்னீஷியா?

By க.போத்திராஜ்


அதில் ரஷித், மொயின் அலி ஆகியோரின் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 குரூப்-1 சுற்றில் மே.இ.தீவுகள் அணியை 6 விக்கெட் வி்த்தியாசத்தில் அடித்து துவைத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 14.2ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 56 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி குரூப்-1 பிரிவில் ரன்ரேட்டில் உச்சத்துக்கு சென்றுவி்ட்டது, ஒரு போட்டியில் வென்று ரன்ரேட்டை 3.90 அளவுக்கு உயர்த்திக் கொண்டது. இதுபோன்ற வெற்றியை இங்கிலாந்து அணியினர்கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

அதேசமயம், மே.இ.தீவுகள் அணியின் ரன்ரேட் மைனஸ் 3 அளவுக்கு சென்றுள்ளது. இதனால் அடுத்துவரும் போட்டிகளில் மே.இ.தீவுகள் அணி மிகப்பெரிய ரன்ரேட்டில் வென்றால்தான் ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ள முடியும்.

மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் வீசிய மொயின் அலி ஒரு மெய்டன் 17ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ஆதில் ரஷித் 2.2ஓவர்கள் வீசி 2 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மொயின் அலி, ரஷித் இருவரும் 6.2ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இது தவிர 2018-ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மில்ஸ் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரை நடப்பு சாம்பியன் எனும் பட்டத்தை மறந்துவிட்டு அடுத்தடுத்த போட்டிகளைச் சந்திப்பதுநல்லது. ஏனென்றால், சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் கட்டத்திலிருந்து நகர்ந்துவிட்டது.

உண்மையில் போராடக்கூடிய தன்மை கொண்டபேட்ஸ்மேன்கள் இருக்கும் எனச் சொல்லப்பட்ட மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்று சுவாரஸ்யமாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை அளித்தது.

ஒட்டுமொத்த பேட்டிங் கொலாப்பஸ் என்றுதான் கூற வேண்டும். மே.இ.தீவுகள் அணியில் களமிறங்கும் அனைத்து பேட்ஸ்மேன்களும் பேட்டை, இஷ்டத்துக்கு சுற்ற வேண்டும், சிக்ஸர், பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் களமிறங்கினர். விக்கெட் சரியும்போது அதை சரிக்கட்டும் நோக்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று எந்த பேட்ஸ்மேனுக்கும் நேற்று தோன்றவில்லை.

விக்கெட் சரியும் போது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நல்ல பார்ட்னர்்ஷிப் அமைப்பது அவசியம். ஆனால், பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு நேற்று மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் ஒருவரும் நேற்று தயாராக வரவில்லை. ெபவிலியனில் ஏதோ முக்கியமான வேலை இருப்பதாக அனைவரும் வந்து களத்தில் சிறிதுநேரம் நின்றுவிட்டு சென்றனர்.

இடதுகை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள் என்பதை பிரேக் செய்ய, டுவைன்பிராவோ களமிறக்கப்பட்டு அவரும் தவறான ஷாட் அடித்து விக்கெட்டை கோட்டை விட்டார்.

நடுவரிசையில் கெய்ரன் பொலார்ட், ரஸல் ஓரளவுக்குத் தாக்குப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அவர்களும் ஏமாற்றினர். ஐபிஎல் தொடரில் மட்டும் சொந்த அணிபோல் ஆடும் மே.இ.தீவுகள், தங்களின் தேசிய அணி எனும்போது ஏன் இதுபோன்ற மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ஏன் எனத் தெரியவி்ல்லை.

நிகோலஸ் பூரன் ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் இருந்துவந்தார், நேற்றைஆட்டத்திலும் அதே மோசமான ஃபார்ம் தொடர்ந்தது. பவர்ப்ளேயில் மே.இ.தீவுகள் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்தது.
10ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்தது. 11-வது ஓவரை ஆதில் ரஷித் வீசவந்தபின்புதான் பேட்டிங் வரிசை சீர்குலைந்தது. ரஸல்(0) பொலார்ட்(6), மெக்காய்(0), ராம்பால்(3) என வரிசையாக வீழ்ந்தனர்.

சில பேட்ஸ்மேன்கள் மோசமாக ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தார் பரவாயில்லை. ஒரு அணியில் 10 பேட்ஸ்மேன்களும் “ நாங்கள் இப்படித்தான் பேட் செய்வோம்” என்று ஒரே மாதிரியாக தவறான ஷாட்களை ஆடினால் என்னவென்று கூறுவது. தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ், லீவிஸ், கெயில், ஹெட்மயர், பூரன், பொலார்ட் ஆகிய ஆடிய ஷாட்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்கள் சரியான பந்தில் விளையாடிய தவறான ஷாட்களாகும். ஒட்டுமொத்தமாக மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்களுக்கு களமிறங்கியவுடன் பேட்டிங் அம்னிஷியா வந்திருக்க வேண்டும்.

பேட்டிங் பயிற்சி எடுத்துவிட்டு வந்தார்களா, அல்லது பேட்டிங் பயிற்சி மறந்துவிட்டதா, பேட்டிங் பயிற்சியே எடுக்கவில்லை என்று நேற்றைய போட்டிய பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

மே.இ.தீவுகள் அணியில் பிக்ஹிட்டர்ஸ் எனச் சொல்லப்படும் ஆன்ட்ரூ ரஸல், பொலார்ட், பிராவோ, கெயில், ஹெட்மயர், பூரன் என பலரும் இருந்தும் எந்த பயனும் இல்லை.

மே.இ.தீவுகள் அணி நேற்று மொத்தம் 86 பந்துகள் மட்டும் விளையாடியது, அதில் 59 பந்துகள் டாட் பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களில் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்கவில்லை. மீதமுள்ள 4.2 ஓவர்களில்தான் 55 ரன்களை அடித்தனர் என்பதுதான் சுருக்கமான கணக்கு. மே.இ.தீவுகள் அணியில் உள்ள 11 பேட்ஸ்மேன்களில் கிறிஸ் கெயில்(13) தவிர 10 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

55 ரன்களை அடித்துவிட்டு அதை டிபென்ட் செய்வோம் என்று மே.இ.தீவுகள் அணியினர் நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை. 55 ரன்களுக்குஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோதே தோல்வி உறுதி என்ற மனநிலையோடுதான் களமிறங்க வேண்டும்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை கேப்டன்ஷிப் பணியை மோர்கன் சிறப்பாகச் செய்தார். மே.இ.தீவுகள் அணியின்பேட்ஸ்மேன்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை நன்குஆய்வு செய்து, ஹோம்ஒர்க் செய்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் களத்துக்கு வந்தனர். இடதுகை பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே அதிகம் என்பதால், மொயின் அலியை பந்துவீச மோர்கன் பயன்படுத்தினார்.

அதற்கு ஏற்றார்போல் நல்ல பலனும் கிடைத்து சிம்மென்ஸ் ஆட்டமிழந்தார். மொயின் அலியின் ஓவரை அடிக்க முடியாமல் மே.இ.தீவுகள் சிரமப்பட்டு ரன்ரேட்டை கோட்டைவிட்டனர். மே.இ.தீவுகள் ரன்ரேட் கடிவாளத்தை இழுத்துப்பிடித்ததில் முக்கியமானவர் மொயின் அலி.

கிறிஸ் கெயில் பவுன்ஸரில் பலவீனமானவர் என்பதை உணர்ந்து மில்ஸைப் பந்துவீசச் செய்து பவுன்ஸரில் காலி செய்தார் மோர்கன். ஹெட்மெயரை வெளியேற்றிய மோர்கனின் நுனுக்கமும் பாராட்டுக்குரியதுதான்.
இருபவுண்டரி அடித்து ஹெட்மயர் தன்னை நிலைப்படுத்த முயன்றபோது, மொயின் அலியை ஸ்லோ பால் வீசச் செய்து தவறான ஷாட் ஆடத் தூண்டி ஹெட்மெயரை வெளியேற்றியதும் மோர்கன்தான். இதுபோன்று ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தனித்தனி உத்தி வகுத்து இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

56 ரன்கள் இலக்கு என்பது இங்கிலாந்து அணிக்கு சேஸிங் செய்ய கடினமானது அல்ல. இருப்பினும் இந்த இலக்கை அடைவதும் எளிதாக இல்லை. 56 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. ஜாஸ் பட்லர் 24 ரன்களுடனும், மோர்கன் 7 ரன்களுடனும் அணியை கரை சேர்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்