டி20 உலகக் கோப்பையில் திருத்தி எழுதப்படாத வரலாறு உண்டு என்றால், அது இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற செய்தி மட்டும்தான். மற்ற அனைத்து சாதனைகளும் கால ஓட்டத்தில் முறியடிக்கப்பட்டாலும் இந்த ஒரு சாதனையை மட்டும் பாகிஸ்தான் அணியால் தகர்க்கவே முடியவில்லை.
டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும், 50ஓவர்கள் உலகக் கோப்பையாக இருந்தாலும் இதுநாள்வரை இந்தியா அணிதான் கிங்காக வலம் வருகிறது. வீராப்புடன் பேசுவது, தி்ட்டங்களை வகுப்பது, களத்தில் சீண்டுவது என பல ஜால்ஜாப்பு வேலைகளை பாகிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியிலும் செய்தாலும் வெற்றி கடைசியில் இந்திய அணிக்குத் தான் கிடைத்துள்ளது.
2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின் 2-வது உலகக் கோப்பையை வெல்ல கோலி தலைமையிலான அணி நாளை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சமவலிமை படைத்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், களத்தில் யார்,யாரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள், திருப்புமுனையை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து ஆட்டத்தின் வெற்றி அமையும்.
கடந்த காலங்களில் டி20 உலகக் கோப்பையில் 5 முறை இந்திய அணியுடன் பாகிஸ்தான் மோதியும் தோல்விச் சந்தித்து திரும்பியுள்ளது. அந்தப் போட்டிகள்குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.
2007ம் ஆண்டு : அச்சுறுத்திய மிஸ்பா
2007ம் ஆண்டுடி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. குரூப் டி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி இன்றி ஆட்டம் டையில் முடிந்தது.
இந்திய அணி வீரர் உத்தப்பா 39 பந்துகளில் 50 ரன்கள் குவித்து முக்கியப் பங்காற்றினார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆசிப் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேஸிங்கில் பாகிஸ்தான் அணியை தனது பந்துவீச்சால் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. ஒரு கட்டத்தில் 35 பந்துகளில் 53 ரன்கள்பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றி கடைசியில் 2 பந்துகளுக்கு ஒரு ரன் என்ற ரீதியில் கொண்டு வந்தார். ஆனால், ஸ்ரீசாந்த் வீசிய கடைசி ஓவரில் 5-வது பந்தில் மிஸ்பாரன் ஏதும் எடுக்கவில்லை, கடைசிபந்தில் ரன் எடுக்க ஓடிய மிஸ்பா ரன்அவுட் செய்யப்பட்டார். போட்டி டையில் முடிந்ததையடுத்து பவுல்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பவுல் அவுட் முறையில் 3-0 என்ற ரீதியல் இந்திய அணி வென்றது.
2007-இறுதிப் போட்டி: மறக்க முடியாத மிஸ்பா
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள மோதின். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் அடித்த 75 ரன்களால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு மிஸ்பா உல் ஹக் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். பாகிஸ்தான் வெற்ரிக்கு 24 பந்துகளில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், மிஸ்பாவின் கடும் போராட்டத்தால் கடைசியில் 4 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஜோகிதர் சர்மா வீசிய ஓவரில் மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடிக்க பவுண்டரி எல்லையில் இருந்த ஸ்ரீசாந்திடம் பந்து கேட்சானது. இந்திய அணி5 ரன்களில் வென்று முதல் உலகக் கோப்பையை வென்றது
2012 உலகக் கோப்பை
5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப்போட்டியில் பாகிஸ்தாைன எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. முதலில் ேபட்செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எல் பாலாஜி, ஜாகீர்கான், இர்பான் பதான், அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோரின் பந்துவீச்சில் பாகிஸ்தான் சுருண்டது.
சேஸிங்கில் ஈடுபட்ட இந்திய அணி கோலியின்(78)அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக சில நாட்களுக்கு முன் நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் கோலி பாகிஸ்தானை அடித்து துவம்சம் செய்த நிலையில் இந்த போட்டி்யிலும் வெற்றி தேடித்தந்தார்.
2014- உலகக் கோப்பை
வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான். முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பு்கு 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 131 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்றஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவ்ரகளில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ரெய்னா(35),தவண்(30) கோலி(36) ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
2016- குரூப் ஸ்டேஜ்
கொல்கத்தாவில் இந்த ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. உமர்அக்மல்(22), ஷோயிப் மாலிக்(26) மட்டும ஓரளவுக்கு சிறப்பாக பேட் செய்தனர். சேஸிங்கில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவண், ரோஹித் சர்மா ஏமாற்றம் அளிக்கவே, ரெய்னாவும் டக்அவுட்டில் வீழ்ந்தார். கோலி,யுவராஜ் சிங் கூட்டணி சரிவிலிருந்து மீட்டனர். யுவராஜ் சிங் 24ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 55 ரன்களிலும், தோனி 13 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித்தந்தனர்.15.5 ஓவர்களில் இலக்கை அடைந்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago