டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியஅணி நாக்-அவுட் சுற்றுக்குவந்துவிட்டால் எந்த அணியாலும் வீழ்த்தமுடியும். பி பிளான் என்பதே இல்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதானச் சுற்றான சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்த இந்திய அணி வலுவாக, அபாரமான ஃபார்மில் இருக்கிறது. இந்திய அணியில் இருக்கும் பெரும்பலாான வீரர்கள் அனைவரும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி நல்ல பயிற்சியிலும் ஃபார்மிலும் இருப்தால், எந்த அணிக்கும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இந்திய அணியை குறைத்துமதிப்பிட்டுள்ளார். ஸ்கே கிரிக்கெட் சேனலுக்கு நாசர் ஹூசைன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
» விராட் கோலியும் மனிதர்தான்; எந்திரம் அல்ல; பழைய கோலி திரும்பி வருவார்: கங்குலி நம்பிக்கை
டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இ்ந்திய அணியும் ஒன்றுதான். ஆனால், தகுதியான அணி என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால், இது டி20 போட்டித் தொடர். இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
தனிவீரர் ஒருவரின் 70 முதல் 80 ரன்கள், ஒரு பந்துவீச்சாளர் திடீரென வீழ்த்தும் 3 பந்துகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். ஆதலால் இந்திய அணியை நாக்அவுட் பிரிவில் எந்த அணியும் தோற்கடிக்க முடியும்.
ஐசிசி நடத்திய போட்டிகளில் இந்தியாவின் டிராக் ரெக்கார்டைப் பாருங்கள், கடந்த காலங்களில் ஆய்வு செய்தால், மிகவும்மோசமாக நாக்அவுட் பிரிவில் செயல்பட்டுள்ளார்கள். கடந்த 2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதுதான் கடைசி. அதன்பின் இந்திய அணியின் ரெக்கார்டு மோசமாக இருந்தது.
2015 உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோல்வி, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வி, 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் தோல்வி, 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் 2-வது இடம், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் என நாக்அவுட் சுற்றில் இந்திய அணி மோசமாகத்தான் செயல்பட்டுள்ளது.
இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் வைத்துள்ளார்கள். நாக்அவுட் சுற்றுக்குவந்துவிட்டாலே, திடீரென இந்திய அணிதவறு செய்துவிடுகிறார்கள். இந்திய அணியிடம் பி பிளான் அதாவது மாற்றுத் திட்டம் ஏதும் இல்லாததே தோல்விக்குக் காரணம்.
நாக்அவுட் சுற்று, அதாவது கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென குறைந்த ஸ்கோரை இந்தியஅணி அடித்தார்கள் அவர்களிடம் பி பிளான் இல்லாததே காரணம்.
ஆதலால் இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் நி்ச்சயம் இது பிரச்சினையாக இருக்கும்.
இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக இருக்கிறார்கள், ஆனால், நடுவரிசையில் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்டர்ஸ் இல்லாதது தோல்விக்கு காரணம்.
இந்திய அணியில் ஏராளமான திறமையான வீரர்கள் இருப்பதால், கோலியும் அவரின் அணியும் தோள்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்து கொண்டு போட்டியை எதிர்கொள்கிறார்கள். இந்த முறை சிறந்த பேட்ஸ்மேன்கள், ஆழமான பேட்டிங் வரிசை, நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், கூடுதலாக தோனியின் ஆலோசனை அனைத்தும் இருக்கிறது. இந்திய அணி பல அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். காகிதத்தில் வேண்டுமானால் வலுவாக இருக்கிறோம் என்று இந்திய அணி கூற முடியும் ஆனால், அதிகமான விஷயங்களைச் செய்ய வேண்டும்
இவ்வாறு நாசர் ஹூசைன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago