வீஸ், எராஸ்மஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா அணி.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில்8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டில் வென்றது நமிபியா அணி.
இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகள் இருக்கும் குரூப்-2 பிரிவில் இடம்பெறுகிறது நமிபியா. இந்தப் பிரிவில் ஸ்காட்லாந்து அணியும் இருக்கிறது.
சூப்பர்-12 சுற்றில் நிச்சயமாக நமபியா அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்விகள் காத்திருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு போட்டியும் மிகக் கடினமான சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும் என்றாலும், சூப்பர்-12 சுற்றுவரை நமிபியா முன்னேறியது பாராட்டுக்குரியது.
சூப்பர்-12 சுற்றுக்கு நமிபியா அணி தகுதி பெற்றது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கும் நேரடியாக நமிபியா தகுதி பெற்றுள்ளது.
கடைசி நேரத்தில் நமிபியா அணிக்காக அதிரடியாக ஆடிய 14 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த அந்த அணியின் பேட்ஸ்மன் டேவிட் வீஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பந்துவீச்சிலும் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீஸ் வீழ்த்தினார்
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நமிபியா போன்ற சின்னச்சிறிய நாடு தகுதி ெபறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் போட்டியில் வென்று சூப்பர்-12 சுற்றுக்குதகுதியானவுடன், நமிபியா அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர், அவர்களுக்கு ஆதரவாக சிறிய அளவிலான நமிபியா ரசிகர்களும் ஒருவொருக்குஒருவர் கட்டியணைத்து, கண்ணீருடன் வாழ்த்துகளைத் தெரிவித்ததைக் காணமுடிந்தது.
அயர்லாந்து அணி சர்வதேச அளவில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாகும். நபியாவின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ெடஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியை வீழ்த்தியுள்ளது.
நமிபியா அணியைப் பொறுத்தவரை கேப்டன் எராஸ்மஸ் அடித்த அரைசதம்(53) டேவிட் வீஸ் (28 ரன்கள்) இருவரும்தான் ஹீரோக்கள். ஷார்ஜா ஆடுகளம் மிகவும் மந்தமானது என்பது தெரியும். 120 ரன்கள் அடித்துவிட்டாலே அதை சேஸிங் செய்ய எதிரணி திணறுவார்கள் என்பது பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் அதே நிலைதான் இந்த ஆட்டத்திலும் நீடித்தது.
நமிபியா தொடக்க வீரர்கள் வில்லியம்ஸ், கிரீன் இருவரும் நிதானமாகத் தொடங்கினாலும் நிலைக்கவில்லை. வில்லியம்ஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்தத்னர்.
அடுத்துவந்த கேப்டன் எராஸ்மஸ், கிரீனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கிரீன் 24 ரன்னில் ஆட்டமிந்தார். அடுத்துவந்த டேவிட் வீஸ், எராஸ்மஸுடன் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் நமிபியா வெற்றிக்கு 6 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
கிரேக் யங்க வீசிய 15-வது ஓவரில் டேவிட் வீஸ் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசியவுடன் நமிபியாவின் ரன்ரேட் நெருக்கடி பெருமளவு குறைந்தது. கடைசி 17 பந்துகளில் நமிபியா வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிமி சிங் பந்துவீச்சில் எராஸ்மஸ் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்டத்தின் போக்கு நமிபியா பக்கம் திரும்பியது.இறுதியாக வீஸ் வின்னிங் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார்
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை அனுபவமான அணி ஆனாலும் அவர்களால் சூப்பர்-12 சுற்றுக்குள் செல்ல முடியவில்லை. பால் ஸ்ட்ரிங், கெவின் ஓ பிரையன் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீரர்கள் தவறவிட்டதே ரன் சேர்க்க முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம். 7.2 ஓவர்களில் அயர்லாந்து 62 ரன்களுடன் வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 12.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பால் ஸ்ட்ரிங்(38), கெவின் ஓ பிரையன்(25), கேப்டன் பால்பி்ர்னி(21) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி 24 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை அயர்லாந்து அணி இழந்தது.
நமிபியா தரப்பில் டேவிட் வீஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைலிங்க் 3விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
விளையாட்டு
13 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago