டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குதான் அதிகமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரதான சூப்பர்-12 ஆட்டங்கள் 23ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்திய அணி தனது முதல்ஆட்டத்தில் 24ம்தேதி பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இந்திய அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 பி பிரிவில் இந்திய அணியோடு பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும்,தகுதிச்சுற்றில் மூலம் வரும் இரு அணிகளும் இடம் பெறும்.
சூப்பர்-12 பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒவ்வொன்றுக்கும் இரு பயிற்சி ஆட்டங்ககள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த 2-வது பயிற்சி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ஏறக்குறைய ப்ளேயிங் லெவனில் இந்திய அணியில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது இந்த இரு போட்டிகளிலும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனது யுடியூப் பக்கத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எந்தப் போட்டித் தொடரிலும் ஒரு குறிப்பிட்ட அணிதான் வெல்லும் எனக் கணிப்பது கடினம், அவ்வாறு கூற முடியாது. ஆனால், எந்த அளவு வெற்றிக்கான வாய்ப்புக் குறித்துக் கூற முடியும். என்னைப் பொறுத்தவரை, இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது சூழல் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்திய அணியில் இருப்போர் அனைவரும் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடியஅனுபவம் உடையவர்கள்.
விராட் கோலி பேட் செய்யாமலே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 153 ரன்களை சேஸிங் செய்யும்போது,இப்போதுள்ள சூழலில் இந்திய அணி மிகுந்த ஆபத்தான அணி என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக பயிற்சிஆட்டங்களை இந்திய அணி எளிதாகக் கையாண்டனர். துணைக் கண்டத்தில் இருக்கும் ஆடுகங்கள்போல்தான் ஐக்கிய அரசு அமீரகத்திலும் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்குஇடையிலான சூப்பர் 12 போட்டிதான் இறுதிப் போட்டிக்கு இறுதியாக இருக்க வேண்டும். எந்த ஆட்டமும் இதுபோன்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில்லை. கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கூட இந்த அளவுக்கு இல்லை. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோதி்க்கொண்டால், தொடக்கம் முதல்,முடிவு வரை இறுதிப்போட்டி போன்றே இருக்கும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, கிடைக்கும் ஊக்கம் பெரிதாக அமையும், 50 சதவீத அழுத்தம் நீங்கிவிடும்
இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago