டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எனது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருக்கும்பட்சத்தில் அணியின் ப்ளேயிங் லெவனிலிருந்து விலகிவிடுவேன். உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு தடையாக இருக்கமாட்டேன் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கேப்டன்ஷிப் மட்டும்தான் நன்றாகச்செய்கிறார், ஆனால், பேட்டிங்கை முழுமையாக மறந்துவிட்டார் என்றுதான் கூற முடியும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஒரே போட்டியில்தான் 47 ரன்கள் சேர்த்தார், அதுவும், இந்தியாவில் நடந்த முதல் சுற்றுப் போட்டிகளி்ல் ஸ்கோர் செய்தார். ஆனால், ஐக்கியஅரபு அமீரகம் சென்றபி்ன் ஒரு போட்டியில்கூட மோர்கன் இரட்டை இலக்க ஸ்கோரை அடிக்கவில்லை.
2021ம் ஆண்டில் இதுவரை 40 டி20 போட்டிகளி்ல் 35 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மோர்கன் 499 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் மோர்கனின் சராசரி 16.63 ரன்கள்தான், அதிபட்சம் ஐபிஎல் தொடரில் அடித்த 47 ரன்கள்தான். இந்த ஆண்டில் டி20 போட்டியில் இதுவரை ஒரு அரைசதம் கூட மோர்கன் அடிக்கவில்லை.
மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் மோர்கன் எவ்வாறு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக கேப்டன்ஷிப் மட்டும் செய்யப்போகிறாரா அல்லது ஏதேனும் ஸ்கோர் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இதுகுறித்து மோர்கன் கிரிக்இன்போ தளத்துக்குபேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் எப்போதும் கூறுவதுபோல், நான் அணியில் ஒரு வாய்ப்புக்குரிய வீரர்தான். உலகக் கோப்பையை வெல்லும் இங்கிலாந்து அணியின் பாதையில் இடையூறாக இருக்கமாட்டேன். என்னுடைய பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது ரன் சேர்க்க முடியவி்ல்லை என்பது தெரியும்.
ஆனால், என்னுடைய கேப்டன்ஷி சிறப்பாக இருக்கிறது, அது அப்படியெ செல்லும் என்பதுதான் என்னுடைய பதில். அதேநேரம் என்னுடைய பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக அமைந்தால், நான் ப்ளேயிங் லெவனிலிருந்து வெளியேறுவேன். பந்துவீச்சாளராகவோ,பீல்டிங்கிலோ ஈடுபடுவதை விரும்புவதைவிட, பங்களிப்பு செய்வதைவிட கேப்டன் பணியை அதிகம் விரும்புகிறேன்.
ஏற்கெனவே ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம், இப்போது டி20 உலகக் கோப்ைபயையும் வென்றால் அது சிறப்பாக இருக்கும். கடந்த 6 ஆண்டுகளாக எங்கள் அணியில் ஒரு குறி்ப்பிட்ட வீரர்கள் குழுவாகவே இருக்கிறார்கள், அணியிலிருந்து நீக்கப்படவி்ல்லை. சிலதிறமையான இளம் வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகையால் அணி மேலும் வலிமையடைந்துள்ளது.
எங்களின் அதிகபட்ச திறமையை அதிகமாக வெளிப்படுத்த எப்போதுமே முயற்சிப்போம், சிறந்த அணியாக இருக்கவே முயற்சிப்போம். கடந்த 2019்ம் ஆண்டிலிருந்து நாங்கள் பந்துவீச்சு,பேட்டிங், பீல்டிங்கில் ஸ்திரமாக, நிலைத்தன்மையுடனே இருக்கிறோம்.
இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.
வரும் 23-ம் தேதி மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மோதுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago