கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகளை இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி 98 நாட் அவுட் மூலம் 6 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 185 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 19.2 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. ரோஹித் சர்மா 57 பந்துகளில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ஷிகர் தவண் அதிரடியாகத் தொடங்கி 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 எடுத்து சுலைமான் பென் பந்தில் பவுல்டு ஆனார். சார்லஸ் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை அடுத்தடுத்து அடித்தார் தவண். ரஹானே மீண்டும் சோபிக்கவில்லை அவர் 7 ரன்களில் இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென்னிடம் ஸ்டம்ப்டு ஆனார். 11-வது ஓவரில் ரோஹித் சர்மா, நர்ஸ் ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சரை விளாசினார். பிறகு ஆந்த்ரே ரசலை ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என்று அடித்து 38 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ரோஹித் அரைசதம் கடந்தார்.
மீண்டும் பென் ஓவரில் ரோஹித் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க, யுவராஜ் சிங், டேரன் சமி ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். 10 ஓவர்களில் 62 என்று இருந்த இந்திய அணி 14-வது ஓவரில் 117/2 என்று முன்னேறியது.
ஆட்டத்தின் 16-வது ஓவரில் டேரன் சமியை யுவராஜ், ரோஹித் ஆகியோர் தலா ஒரு சிக்ஸ் அடிக்க, யுவராஜ் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார். 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்த யுவராஜ் அப்போது டேரன் சமி பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
18-வது ஓவரில் ஜடேஜா 10 ரன்களில் பிராத்வெய்ட்டிடம் அவுட் ஆனார். ரோஹித் சர்மா மேலும் வலுவாகச் செல்ல கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் விளாசப்பட்டது. பவன் நேகி 8 ரன்களிலும், பாண்டியா முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்தியா 185 ரன்கள் குவித்தது.
மேற்கிந்திய அணி விரட்டலை அதிரடி மூலம் தொடங்கியது முதல் ஓவரை அஸ்வின் வீச சார்லஸ் கடைசி 2 பந்துகளை சிக்சர்களுக்கு விரட்டினார். மற்றொரு முனையிலும் ஆஃப் ஸ்பின்னே கொடுக்கப்பட்டது, இதில் ஹர்பஜன் பந்து வீச வந்தார். இதில் கிறிஸ் கெயில் அவரை 1 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் விளாசினார்.
3-வது ஓவர் மீண்டும் அணிக்கு வந்துள்ள மொகமது ஷமி வீச அழைக்கப்பட்டார். ஆனால் கெயில் இவரை 2 பவுண்டரிகள் அடிக்க 3 ஓவர்கள் முடிவிலேயே 35 ரன்கள் வந்தது.
4-வது ஓவரில் பும்ரா மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் 11 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் அச்சுறுத்திய கிறிஸ் கெயிலை பவுல்டு செய்தார். அடுத்த ஓவரில் ஷமி, 2 சிக்சர்களுடன் 18 ரன்கள் எடுத்த சார்லஸை வீழ்த்தினார், தோனி கேட்ச் பிடிக்க சார்லஸ் அவுட் ஆனார். ஆனால் அதே ஓவரில் மர்லன் சாமுயெல்ஸ், ஷமியை 2 பவுண்டரிகள் அடித்தார்.
பும்ரா தனது 2-வது ஓவரை சிறப்பாக வீசி முதல் 4 பந்துகளில் ரன்கள் இல்லை. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பும்ரா 2 ஓவர்களில் 6 ரன்கள் மற்றும் மிக முக்கிய விக்கெட்டான கிறிஸ் கெயிலை வீழ்த்தியிருந்தார். பவர் பிளே முடிவில் மே.இ.தீவுகள் 51/2 என்று வலுவாக இருந்தது. பிறகு பவன் நேகி தனது ஓவரை சிக்கனமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுக்க, ஜடேஜா மறு முனையில் தினேஷ் ராம்தின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பவன் நேகியின் 2-வது ஓவர் பிராவோவுக்கு அருமையாக அமைந்தது. இதில் 2 ரன்களே வந்தன. பிராவோ 4 பந்துகளில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. பிறகு பிராவோ மட்டையில் பந்துகள் பட ஜடேஜாவை 2 பவுண்டரிகள் அடித்தார். மே.இ.தீவுகள் 10 ஓவர்களில் 70/3 என்று இருந்தது. அதாவது இந்திய அணி 10 ஒவர்களில் பெற்றிருந்த ரன்களை விட 8 ரன்கள் கூடுதலாகும் இது. இந்நிலையில் தனது 3-வது ஓவரிலும் நேகி. பிராவோ, மற்றும் சாமுயெல்ஸை படுத்தினார் 2 ரன்களையே எடுக்க முடிந்தது. இந்நிலையில் நெருக்கடி அதிகரிக்க ஜடேஜாவிடம் சாமுயெல்ஸ் 17 ரன்கள் எடுத்து பவுல்டு ஆனார்.
இன்னிங்ஸின் 13-வது ஓவரில் மீண்டும் பவன் நேகி அற்புதமாக வீசி டிவைன் பிராவோ (13) மற்றும் பிராத்வெய்ட் (6) ஆகியோரை காலி செய்து தனது 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டேரன் சமி, ஹோல்டர் ஆகியோர் சோபிக்கவில்லை. 19.2 ஓவர்களில் மே.இ.தீவுகள் 140 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் ஷமி, பாண்டியா, நேகி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஸ்வின் 2 ஓவர்களில் 21 ரன்கள் என்று முடிந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago