ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் தோனி அளிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் ஐபிஎல் 2021 கோப்பையை சென்னை நான்காவது முறையாக வென்றது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் பூஜை செய்தனர். வழிபாட்டுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. 20 -20 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி நாடு திரும்பியவுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். ஐபிஎல் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் தோனி அளிப்பார். அந்த வெற்றி விழாவை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடத்த உள்ளோம். அப்போதுதான் மக்கள் கலந்துகொள்ள முடியும்” என்று சீனிவாசன் தெரிவித்தார்.
ஐபிஎல் தவிர்த்து அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற தோனி, தற்போது 20- 20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago