ஐபிஎல்2021-எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருது? முழுமையான விவரங்கள்

By ஏஎன்ஐ


துபாயில் நடந்த ஐபிஎல் டி20 14-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த போட்டியின் முடிவில் பல வீரர்களுக்குவிருதுகளை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் கோப்பையை வென்று 4-வது முறையாக சாம்பியன்பட்டத்தை சிஎஸ்கே வென்றுள்ளது.

அதேநேரம், கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப் போட்டிக்குவந்து தோல்வி அடைந்துள்ளது.

இந்தத் தொடரில் அதிகமான ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வென்றார். 16 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 635 ரன்கள் சேர்த்தார்,இதில் ஒரு சதம், 4 அரைசதம் அடித்துள்ளார்.23சிக்ஸர்களும், 64 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

அடுத்தார் போல் ஃபா டூப்பிளசிஸ் 633 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் கெய்க்வாட்டை பிடிக்கமுடியாமல் நேற்றைய ஆட்டத்தில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் தொப்பியை வென்றுள்ளார். இதில் ஹர்சல் படேல் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும், ஒருமுறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே வீரர் பிராவோ கடந்த 2012ம் ஆண்டு 32 விக்கெட்டுகளை ஒரே சீசனில் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது, அந்த சாதனையை ஹர்சல் படேல் சமன் செய்துள்ளார்.

வளர்ந்துவரும் வீரருக்கான விருதை சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் பெற்றார். இந்த சீசனில் 635 ரன்கள் குவித்த கெய்க்வாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கேம்சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருது, அதிக மதிப்பு மிக்க வீரருக்கான விருது, பர்ப்பிள் தொப்பி ஆகிய 3 விருதுகளும் கிடைத்தன.

போட்டிகளில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதற்கான விருது(ஃபேர் ப்ளே அவார்ட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனின் சிறந்த கேட்ச் பிடித்தமைக்கான விருது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ரவி பிஸ்னாய்க்கு வழங்கப்பட்டது. அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் அடித்த ஷாட்டை மிட்விக்கெட்டில் தாவி பிடித்தமைக்காக பிஸ்னாய்க்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயருக்கு வழங்கப்பட்டது. ஹெட்மயர் தனது ஸ்ட்ரைக்ரேட்டாக 168 வைத்திருந்தார்.

இந்த சீசனில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரராக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல், 30 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இந்த சீசனில் அதிகமான பவுண்டரிகளை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார். கெய்க்வாட் மொத்தம் 64 பவுண்டரிகளும், டெல்லி கேபிடல்ஸ் வீரர் தவண் 63 பவுண்டரிகளும் அடித்தனர்.

இந்த சீசனில் அதிகமான அரைசதம் அடித்த வீரர்களில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ் முதலிடத்தில் உள்ளார். டூப்பிளசிஸ் 16இன்னிங்ஸில் 6 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் 4 வீரர்கள் சதம் அடித்தனர். சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் ஆகியோர் அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்