7 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் ஃபைனல்: கொல்கத்தா த்ரில் வெற்றி: ஒரு பந்தில் திருப்பத்தை ஏற்படுத்திய திரிபாதி: டெல்லியின் போராட்டம் வீண்

By க.போத்திராஜ்


வருண், நரேன், பெர்குஷன், மாவியின் பந்துவீச்சு, வெங்கடேஷ், திரிபாதியின் பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. துபாயில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி அதில் 7-வது வெற்றியைப் பெற்றது. 2 முறை கொல்கத்தாவுடன் மோதி இருமுறையும் டெல்லி தோற்றுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அதேபோல நடக்குமா அல்லது 2018-ம் ஆண்டுக்குக்குப்பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி கைப்பற்றுமா என்பது நாளை தெரியும்.
கொல்கத்தா அணியின் சேஸிங்கிற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த வெங்கடேஷ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வெங்கடேஷ் 41 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். முதல் 4 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களை அடித்தாலும், அதன்பின் கடிவாளத்தை இழுத்துப்பிடித்து ஆட்டம் முழுவதையும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

சுனில் நரேன், வருண், ஷிவம் மாவி, பெர்குஷன், சஹிப் அல் ஹசன் ஆகிய 5 பேருமே நேற்று சிறப்பாகப் பந்துவீசினர். 5 வீரர்களும் சராசரியாக 6 ரன்களுக்கு மேல் கொடுக்கவி்ல்லை. ஏறக்குறைய 45 டாட் பந்துகளை இந்த 5 வீரர்களும் வீசினர், 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கவிட்டனர்.

வருணுக்கு 3 விக்கெட்டுகள் கிடைக்க வேண்டியது. ஆனால், ஒரு இன்ச் காலை க்ரீஸுக்குள் நகர்த்தியிருந்தால், கூடுதலாக ஒரு விக்ெகட் கிடைத்திருக்கும். நோ-பால் அறிவிப்பால் 3-வது விக்கெட் கைநழுவிப் போனது.

ஷார்ஜா ஆடுகளம் மெதுவானது, மிதவேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் மட்டுமே ஒத்துழைக்கும். அதிலும் பந்து முழங்காலுக்கு மேல் எழும்பாது என்பதை தெரிந்து கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்தில் வேகத்தை அதிகரிக்காமல் புத்திசாலித்தனமாகச் சிறப்பாகப் பந்துவீசினர்.

கொல்கத்தா அணி சேஸிங்கின்போது, ஆட்டத்தின் 15 ஓவர்கள்வரை வெற்றி கொல்கத்தாவின் பக்கம்தான் இருந்தது. ஆனால், அடுத்த 4 ஓவர்கள் ஆட்டம் திசைமாறி டெல்லி கேபிடல்ஸ் பக்ககம் பயணிக்கத் தொடங்கியது. ஆட்டம் போன போக்கைப் பார்த்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரசிகர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால் ஃபினிஷிங் இப்படியா இருக்கனும் என்பதுபோல் பெவிலியனில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் பாண்டிங் புன்னகைத்தார்.

கடைசி 4 ஓவர்களையும் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர்.123 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 7 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.

ஆனால், கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அஸ்வின் பந்தில் திரிபாதி அடித்த சிக்ஸர் வெற்றிக்கு கொண்டு சென்றது.

கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவை, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் கில் ஒரு அபாரமான சிக்ஸர் அடிக்க, அதே ஓவரில் ராணா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்கப்பட்டது.

24 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றிக்கு தேவைப்பட்டது. பந்துகள் அதிகமாகவும், ரன்கள் குறைவாகவும் இருந்தன. கொல்கத்தா அணியின் பக்கம் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.
ஆவேஷ் கான் வீசிய 17-வது ஓவரில் கில் 46 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது. அந்த ஓவரில் கொல்கத்தா அணி 2 ரன் மட்டுமே எடுத்தது ஒரு விக்கெட்டையும் இழந்தது.

18 பந்துகளில் கொல்கத்தா அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ரபாடா வீசினார், இந்த ஓவரின் கடைசிப்பந்தில் தினேஷ் கார்த்திக் கிளீன் போல்டாகி வெளிேயற, கொல்கத்தா அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே சேர்த்தது.

12 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. நோர்க்கியா வீசிய 19-வது ஓவரில் மோர்கன் ஆட்டமிழக்க 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
கொல்கத்தா ரசிகர்கள் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்திலும், எதிர்பார்்ப்பிலும் இருந்தனர். ஆனால், டெல்லி ரசிகர்களும், நிர்வாகிகளும் ஆட்டம் தங்கள்பக்கம் வந்துவி்ட்டது, வெற்றிதான், பைனல் சென்றுவிடுவோம் என்று மகிழ்ச்சியில் இருந்தனர்.

அஸ்வின் கடைசி ஓவரை வீசினார். களத்தில் சஹிப் அல்ஹசன், திரிபாதி இருந்தனர். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் சஹிப் அல் ஹசன் ரன் எடுக்கவில்லை, 3-வது பந்தில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நரேன் 4-வது பந்தை தூக்கி அடிக்க லாங் ஆஃபில் கேட்ச் ஆனது. ஆனால், அதற்கு ரன் ஓடும் முயற்சியில் திராபாதி ஸ்ட்ரைக்கிற்கு வந்துவிட்டார்.
கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் திரிபாதி சிக்ஸர் அடித்து கொல்கத்தாவுக்கு வெற்றியாக அமைந்தது.

ஒருகட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற பந்துகள் அதிகமாகவும், ரன்கள் குறைவாகவும் இருந்தது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசி ஆட்டத்தை பெரும் நெருக்கடிக்கு கொண்டு வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் திரிபாதி அடித்த சிக்ஸர் டெல்லி அணியின் மகிழ்ச்சிக் கோட்டையை சுக்குநூறாக்கியது.

136 ரன்ககள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. வெங்கடேஷ், கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரையும் பிரிக்க ரிஷப் பந்த் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் முடியவி்ல்லை.

சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய வெங்கடேஷ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 41 பந்துகளில்55 ரன்கள்(3சிக்ஸர்,4பவுண்டரி) சேர்த்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 86 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அடுத்துவந்த ராணா, கில்லுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 123 ரன்கள் வரை கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
ராணா 13 ரன்னில் நோர்க்கியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பின்புதான் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் செட்டில்ஆன பேட்ஸ்மேன் கில் 46 ரன்னில் ஆவேஷ்கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக், மோர்கன், சஹிப் அல் ஹசன், நரேன் ஆகிய 4 பேரும் டக்அவுட்டில் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியே ஆட்டம் டெல்லிபக்கம் நகர்ந்தது.

கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, திராபாதி அடித்த சிக்ஸரில் கொல்கத்தா அணி வென்றது. திரிபாதி 12 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வின்னிங் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் நோர்க்கியா, ரபாடா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடியதே தோல்விக்கு காரணமாகும். வலிமையான பேட்டிங் வரிசையை வைத்திருந்தும் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

135 ரன்களை வைத்துக் கொண்டு அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் கொல்கத்தாவை அடக்குவது கடினம். இதுவரை ஐபிஎல் தொடரில் 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி 150 ரன்களுக்கும் குறைவாக எடுத்து அதை டிபென்ட் செய்ய முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. அந்த கதை ேநற்றும் தொடர்ந்தது.

ஸ்டாய்னிஷ் அணிக்குள் வந்ததால் பேட்டிங் ஸ்திரமடையும் என்று நம்பி களமிறக்கினர். ஆனால், பேட்டிங் வலிமை அடையும் என்பது காகிதத்தில் மட்டுமே எழுதிக்கொள்ளலாம். ஸ்டாய்னிஷ் பெரிதாக ஏதும் செய்யவில்லை. வழக்கமாக களமிறங்கும் ஸ்ரேயாஸ் அய்யரை ஒன்டவுனில் களமிறக்கி இருந்தால் செட்டில் ஆகி கடைசி நேரத்தில் அடித்திருப்பார்.

பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தனர். இன்னும் கூடுதலாக 10 ரன்கள் அடித்திருந்தாலும், பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதுதான், தோல்விக்கு பிரதான காரணம்

அதிரடியான தொடக்கத்தை அளித்தனர் 4 ஓவர்களில் 26 ரன்கள் சேர்த்து கொல்கத்தாவுக்கு கிலி ஏற்படுத்தினர். பிரித்வி ஷா, தவண் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசியதால், பரபரப்படைந்தது. ஆனால், வருண் பந்துவீச அழைக்கப்பட்டதும், ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. பிரித்வி ஷா 18 ரன்னில் வருண் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் ஃபார்மில் இல்லாமல் களமிறங்கி பேட்டிங் செய்ய தடுமாறினார். பந்துகளை வீணடித்தாரேத் தவிர ஷாட்கள் ஏதும் ஸ்டாய்னிஷ்க்கு மீட் ஆகவில்லை. ஸ்டாய்னிஷ்18 ரன்னில்மாவி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து தவண் 36 ரன்னில் வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் பந்த்திற்கு அழுத்தம் அதிகரிக்கவே பெரிய ஷாட் அடிக்கும்முயற்சியில் 6 ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஹெட்மயர் 17 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார். வருண் பந்தவீச்சில் ஹெட்மெயர் அடித்த ஷாட்டில் கில் கேட்ச் பிடித்து ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஹெட்மெயரும் பெவிலியனுக்குச் சென்றுவிட்டார். ஆனால், ரீப்ளேயில் வருண் வீசியது நோபால் எனத் தெரிந்ததும், மீண்டும் ஹெட்மெயர் வந்து இரு சிக்ஸர்களை விளாசிவிட்டு ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட முயன்றும் முடியவில்லை. பெரும் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஸ்ரேயாஸ் மீது இருந்ததால், ஷாட்களும்மீட் ஆகவி்ல்லை. ஸ்ரேயாஸ்30 ரன்களுடனும், படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்